"ஆளுமை:பிரேமளா, சிவசேகரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 21: வரிசை 21:
  
 
குறிப்பு: தகவல்கள் பிரேமளா சிவசேகரம் அவர்களிடம் பெறப்பட்டவை.
 
குறிப்பு: தகவல்கள் பிரேமளா சிவசேகரம் அவர்களிடம் பெறப்பட்டவை.
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

00:52, 22 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

பெயர் பிரேமளா
தந்தை சிவப்பிரகாசபிள்ளை
தாய் லீலாமணி
பிறப்பு 1942.04.21
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை இலங்கையின் முதலாவது பொறியிலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரேமளா, சிவசேகரம் (1942.04.21) யாழ்ப்பாணம் கோட்டையில் பிறந்தார். இவரது தந்தை சிவப்பிரகாசபிள்ளை; தாய் லீலாமணி. இவருக்கு பிரமன், பிரதாபன் என இரு சகோதரர்கள் உள்ளனர். கொழும்பு மகளிர் கல்லூரியில் தரம் ஒன்று தொடக்கம் தரம் பன்னிரண்டு வரை கல்வி கற்றார். அக் காலத்தில் பொறியியல் துறையை பெண்கள் தெரிவு செய்வது அரிதாகவே இருந்ததனால் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1960ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து இலங்கைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இணைந்தார். பொறியியல் கற்கை நெறியில் இரும்புவேலைகள், மரத்தளபாடம், வெல்டிங் பொருத்துதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. 1964ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் பொறியியலாளராக பிரேமளா சிவப்பிரகாசிபிள்ளை பட்டம் பெற்றார். 1965ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப் பெற்ற பிரேமளா பிரித்தானியா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கற்கைநெறியை மேற்கொண்டு 1969இல் கலாநிதி பட்டம் பெற்றார். 1968ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி பிரேமளா திருமணம் செய்தார். அவரின் கணவரின் பெயர் சிவசேகரம். பேராசிரியர் சிவசேகரமும் ஒரு பொறியியலாளர் ஆவார். பிரேமளா சிவசேகரம் தம்பதியினரின் ஒரே மகனான சிவசேகரம் மணிமாறன் ஐக்கிய இராச்சியத்தில் ஓர் நிர்வாக அதிதியாக கடமைற்றுகின்றார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கற்கையின் போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் பொறியியலாளர் மாநாடு ஒன்றில் பங்கேற்க பிரேமளாவுக்குச் சந்தர்ப்பம் கிட்டியது. எதிர்வரும் நூற்றாண்டில் பெண் பொறியியலாளர்களின் பணி என்றதொனிப் பொருளில் நடந்த இந்த மாநாட்டின் ஓர் அமர்வின் தலைவியாக பிரேமளா செயற்பட்டார். பட்டப்பின் கற்கைநெறியை முடித்து இவர் மீளவும் இலங்கை அரச சேவையில் இணைந்தார். 1971ஆம் ஆண்டு அரச கட்டடத் திணைக்களத்திற் குடிசார் பொறியியலாளராகவு நியமனம்பெற்றப் பின்னர் இத் திணைக்களத்திற் கட்டுமானப் பொறியியலாளராக நியமிக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டில் கட்டடத் திணைக்களத்தின் பிரதம கட்டுமானப் பொறியியலாளராக நியமிக்கப்பட்டார். பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இவரின் முதலாவது கட்டல் அமைவிட மேற்பார்வைப் பயிற்சிக் காலத்திலேயே மாத்தளை வைத்தியசாலைக்கு ஓர் களஞ்சியசாலை அமைக்கப்பட்டது. பல மாடிகளைக் கொண்ட டெலிகொம் நிறுவனத்தின் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. ஆண் பொறியியலாளர்கள் சிலர் தயங்கிய பிரச்சினைகளைப் பிரேமளா பொறுப்பேற்றார்.

தேசிய நூலகம், காவல்துறை தலைமையகம், மாளிகாவத்தை கட்டடங்கள் சில உட்பட்டவை பிரேமளாவின் தலைமையில் விதானித்து நிர்மாணிக்கப்பட்டவையாகும். அத்தோடு கொரிய நிறுவனம் செத்ரிசிபாய கட்டடத்தை அமைத்தபோதும், ஐக்கிய அரசாங்க நிறுவனம் இசுறுபாயவை அமைத்தபோதும் அவற்றைக் கண்காணித்த குழுவின் செயலாளராக பிரேமளா செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1976ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரையில் இலங்கைப் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தி இன்ஜினியர் என்ற சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டில் இலங்கைப் பொறியில் கூட்டுத்தாபனத்தின் 100ஆம் ஆண்டு விழாவைச் சிறப்பிக்க இலங்கை பொறியியல் வரலாறு என்ற பெறுமதிமிக்க பொறியியல் வரலாற்ற நூலையும் ஆக்கினார். 1997ஆம் ஆண்டு முதல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய பிரேமளா 2007ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

குறிப்பு: தகவல்கள் பிரேமளா சிவசேகரம் அவர்களிடம் பெறப்பட்டவை.