"ஆளுமை:காசி ஆனந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
காசி ஆனந்தன் (1938 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், உணர்ச்சிக் கவிஞர். இவரின் இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். இளைஞனாக இருந்த காலத்தில் சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்.
+
காசி ஆனந்தன் (1938 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், உணர்ச்சிக் கவிஞர். இவரது இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். இவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். இளைஞனாக இருந்த காலத்தில் சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்.
 +
 
 +
பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963 இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் இலங்கையில் ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.
 +
 
 +
இவர் தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். காசி ஆனந்தன் உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் உட்பட பல கவிதை நூல்களைத் தந்துள்ளார்.
 +
 
 +
தெருப்புலவர், உயிர் தமிழுக்கு – 1961, தமிழன் கனவு – 1970, காசி ஆனந்தன் கவிதைகள் - 1981 (பாகம் 1, 2), சுவர்க்கவிகள் - உட்பட பல கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். காசி ஆனந்தன் கதைகள், நறுக்குகள் ஆகியன இவரது சிறுகதைகளாகும்.
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:57, 23 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் காசி ஆனந்தன்
பிறப்பு 1938
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காசி ஆனந்தன் (1938 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், உணர்ச்சிக் கவிஞர். இவரது இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். இவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். இளைஞனாக இருந்த காலத்தில் சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்.

பின்னர் தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் உயர் கல்வி கற்கும் வேளையில் அங்கு பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் 1963 இல் இலங்கை திரும்பி இலங்கை அரச மொழித்திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். 1972 இல் இலங்கை குடியரசாக மாறியபோது அதன் தமிழ் எதிர்ப்புக் கொள்கையோடு ஒத்து வராததால் அரசுப் பணியிலிருந்து விலகி ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். இவர் இலங்கையில் ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

இவர் தமிழீழத்தின் அதிஉயர் விருதான மாமனிதர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். காசி ஆனந்தன் உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் உட்பட பல கவிதை நூல்களைத் தந்துள்ளார்.

தெருப்புலவர், உயிர் தமிழுக்கு – 1961, தமிழன் கனவு – 1970, காசி ஆனந்தன் கவிதைகள் - 1981 (பாகம் 1, 2), சுவர்க்கவிகள் - உட்பட பல கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். காசி ஆனந்தன் கதைகள், நறுக்குகள் ஆகியன இவரது சிறுகதைகளாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 14428 பக்கங்கள் 385

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:காசி_ஆனந்தன்&oldid=207617" இருந்து மீள்விக்கப்பட்டது