"ஆளுமை:தபேந்திரன், வேதநாயகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை1| பெயர்=தபேந்திரன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:59, 7 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தபேந்திரன்
தந்தை வேதநாயகம்
தாய் பரிமளகாந்தி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம், சுண்டுக்குழி
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தபேந்திரன், வேதநாயகம் யாழ்ப்பாணம், சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை வேதநாயகம்; தாய் பரிமளகாந்தி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ் புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி, குடித்தொகை அபிவிருத்திக் கற்கையில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, அபிவிருத்திக் கற்கையில் முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சமூகசேவைகள் உத்தியோகத்தராக அரச கடமையில் திருகோணமலையில் 1997 ஆம் ஆண்டில் இணைந்து 4 வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தராகக் கடமையாற்றினார்.

சிறு வயது முதல் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டுள்ளார். 16 வயதில் எழுதிய கவிதை ஈழநாடு நாளிதழில் மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் நினைவஞ்சலியாக பிரசுரமானது.அதே ஆண்டில் வீரகேசரி வாரமலரில் சிறுவர் சிறுகதையொன்று பிரசுரமாகியது. பொது அறிவுத் தகவல்களைச் சேகரிப்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். 1992. ஆம் ஆண்டு முதலே போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கு பொது அறிவு கற்பிக்க ஆரம்பித்தார். 1996 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 11 நூல்களை இத்துறையில் வெளியிட்டுள்ளார்.

பத்திரிகைகளில் சமூகம் சார்ந்த விடயங்களை யாழ்ப்பாண நினைவுகள் சார்ந்த சிலவற்றை எழுதியுள்ளார். அவற்றில் தேர்ந்தெடுத்த 29 ஆக்கங்களை 2012 ஆம் ஆண்டில் பூத்திடும் பனந்தோப்பு என்னும் பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார். இந் நூல் பெருமளவில் விற்பனையாக பலரும் யாழ்ப்பாண நினைவுகள் குறித்து எழுதுங்கள் என்றார்கள் .அதனால் தினக்குரல் வாரமலரில் 2012,2013.ஆண்டுகளில் யாழ்ப்பாண நினைவுகள் எனும் கட்டுரையை எழுதினேன்.அவை யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 01 நூலாக 2014.இலும், பாகம் 2 ,2015இலும், பாகம் 3 2016 இலும் வெளிவந்து வாசகர்களின அமோக ஆதரவைப் பெற்றது. பாகம்01,02 நூல்கள் மறுபிரசுரமாகி உள்ளது

Attachments area