"ஆளுமை:ராஜஸ்ரீகாந்தன், ராஜரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 21: வரிசை 21:
 
*[http://varmah.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ராஜசீறீகாந்தன் பற்றி சி.வன்னியகுலம்]
 
*[http://varmah.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ராஜசீறீகாந்தன் பற்றி சி.வன்னியகுலம்]
  
 +
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் ராஜ ஸ்ரீகாந்தன்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13958|10-12}}
 
{{வளம்|13958|10-12}}
 
{{வளம்|15514|304-309}}
 
{{வளம்|15514|304-309}}
 
 
 
 
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
 
{{வளம்|4428|420-422}}
 
{{வளம்|4428|420-422}}
 
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் ராஜ ஸ்ரீகாந்தன்]
 

22:46, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ராஜஸ்ரீகாந்தன்
தந்தை ராஜரட்ணம்
தாய் சீவரட்ணம்
பிறப்பு 1948.06.30
இறப்பு 2004.04.20
ஊர் வதிரி
வகை எழுத்தாளர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜஸ்ரீகாந்தன், ராஜரட்ணம் (1948.06.30 - 2004.04.20) யாழ்ப்பாணம், வடமராட்சி, வதிரியைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை ராஜரட்ணம்; தாய் சீவரட்ணம். இவர் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.

இவர் 'விவேகி' சஞ்சிகையின் மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானவர். இவருடைய சிறப்பான சிறுகதைகள் தேசிய, விதேசியச் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.1987 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறைப் பாட நெறியை முடித்தவர். இவர் சோவியத் நாடு, சோஷலிஸம் - தத்துவமும் நடைமுறையும், புதிய உலகம் ஆகிய சஞ்சிகைகளிலும் 'சக்தி' பத்திரிகையினதும் ஆசிரிய பீடங்களில் சிறப்பாகப் பணியாற்றியவர்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முன்னணி உறுப்பினரான இவர், இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியுடனும் மிக நெருங்கிய உறவினைப் பேணியதால் சோவியத் ரஷ்யாவின் நொவெஸ்திச் செய்திச் சேவையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. இவர் 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 வரை தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் இலக்கிய மேதையான அழகு சுப்பிரமணியத்தைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளைத் தமிழாக்கம் செய்து நீதிபதியின் மகன் என்ற புத்தகமாக்கி வெளியிட்டதுடன் அப்பணிக்கெனச் சாகித்திய மண்டலப் பரிசையும் வென்றெடுத்தார். இவரின் கால சாளரம் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுடன் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசிலைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. வடக்கு - கிழக்கு மாகாண இலக்கிய விருதுகளையும் பெற்றார்.

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 10-12
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 304-309
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 420-422