"ஆளுமை:மகேஸ்வரன், தியாகராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=மகேஸ்வரன்| | பெயர்=மகேஸ்வரன்| | ||
தந்தை=தியாகராஜா| | தந்தை=தியாகராஜா| |
23:17, 2 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகேஸ்வரன் |
தந்தை | தியாகராஜா |
பிறப்பு | 1960.06.18 |
இறப்பு | 2008.01.01 |
ஊர் | காரைநகர் |
வகை | அரசியல்வாதி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேஸ்வரன், தியாகராஜா (1960.06.18 - 2008.01.01) காரைநகரைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி. இவரது தந்தை தியாகராஜா. யாழ். பரியோவான் கல்லூரியில் உயர் கல்வியைக் கற்ற இவர், நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் தனது தந்தையைப் போன்று வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
இவர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சரானார். இவர் அக்காலத்தில் போராட்டத்தினால் பாழடைந்த வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களைப் புனரமைப்பதில் ஈடுபட்டதோடு, திருக்கேதீச்சர ஆலயத்தின் புனர்நிர்மாணத்தைத் தொடக்கி வைத்தார்.
இவர் நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல் கொடுத்து வந்தார். இவர் ஜனவரி 1, 2008 இல் புத்தாண்டை முன்னிட்டுக் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரியினால் சுடப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 341-342