"ஆளுமை:புன்னியாமீன், பீர் முகம்மது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=புன்னியாமீன்|
 
பெயர்=புன்னியாமீன்|
 
தந்தை=பீர் முகம்மது|
 
தந்தை=பீர் முகம்மது|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
புன்னியாமீன், பீர் முகம்மது (1960.11.11 - 2016.03.10) கண்டி, உடதலவின்னையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை பீர் முகம்மது; இவரது தாய் சைதா உம்மா. இவர் கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியற் துறையில் டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 1983 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கல்லூரி அதிபராகவும் மத்திய மாகாண சபை கல்வி-கலாச்சார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும் மத்திய மாகாண கலாச்சார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
+
புன்னியாமீன், பீர் முகம்மது (1960.11.11 - 2016.03.10) கண்டி, உடதலவின்னையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை பீர் முகம்மது; தாய் சைதா உம்மா. இவர் கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியற் துறையில் டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 1983 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கல்லூரி அதிபராகவும் மத்திய மாகாண சபை கல்வி-கலாச்சார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும் மத்திய மாகாண கலாச்சார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
  
இவர் மாணவப் பருவத்திலிருந்து வாசிப்புத்துறையில் ஆர்வம் காட்டி வந்தார். இவரின் முதல் உருவகக் கதையான ‘அரியணை ஏறிய அரசமரம்’ 1978 ஜுலை 02 ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து 160 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 5000 இற்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் கலைமகள், தீபம், தாமரை உட்படப் பல புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகைகளிலும் ஈழத்துத் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் 1987 ஆம் ஆண்டு “சிந்தனைவட்டம்” என்ற வெளியீட்டு அமைப்பை உருவாக்கி ஏராளமான நூல்களை வெளியீடு செய்துள்ளார்.
 
04:15, 2 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் புன்னியாமீன்
தந்தை பீர் முகம்மது
தாய் சைதா உம்மா
பிறப்பு 1960.11.11
இறப்பு 2016.03.10
ஊர் கண்டி, உடதலவின்ன
வகை எழுத்தாளர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புன்னியாமீன், பீர் முகம்மது (1960.11.11 - 2016.03.10) கண்டி, உடதலவின்னையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை பீர் முகம்மது; தாய் சைதா உம்மா. இவர் கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியற் துறையில் டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 1983 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கல்லூரி அதிபராகவும் மத்திய மாகாண சபை கல்வி-கலாச்சார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும் மத்திய மாகாண கலாச்சார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் மாணவப் பருவத்திலிருந்து வாசிப்புத்துறையில் ஆர்வம் காட்டி வந்தார். இவரின் முதல் உருவகக் கதையான ‘அரியணை ஏறிய அரசமரம்’ 1978 ஜுலை 02 ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து 160 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 5000 இற்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் கலைமகள், தீபம், தாமரை உட்படப் பல புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகைகளிலும் ஈழத்துத் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் 1987 ஆம் ஆண்டு “சிந்தனைவட்டம்” என்ற வெளியீட்டு அமைப்பை உருவாக்கி ஏராளமான நூல்களை வெளியீடு செய்துள்ளார்.

இவர் 1979 ஆம் ஆண்டு ‘விடிவு’ என்னும் இலக்கியச் சஞ்சிகையையும் 1980களில் ‘அல்ஹிலால்’ என்னும் பத்திரிகையையும் ஆசிரியராகவிருந்து நடத்தினார். இவர் தேவைகள், நிழலின் அருமை, கரு, நெருடல்கள், அந்தநிலை, யாரோ எவரோ எம்மை ஆள, இனி இதற்குப் பிறகு ஆகிய சிறுகதை நூல்களையும் அடிவானத்து ஒளிர்வுகள் என்ற நாவலையும் புதிய மொட்டுக்கள், அரும்புகள், பாலங்கள் ஆகிய கவிதைத் தொகுப்புக்களையும் இலங்கையின் தேர்தல்கள், 94 பொதுத் தேர்தலும் சிறுபான்மையினங்களும், 94 ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மையினங்களும், 21 ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தலைமைத்துவம், 2000 பாராளுமன்றத் தேர்தலும் சிறுபான்மைச் சமூகத்தினரும், 2002 ஜனவரியில் ‘சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12 ஆவது பாராளுமன்றம், 2002 ஜுனில் மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சுப் பதவிக்குச் சாவுமணி ஆகிய அரசியல் ஆய்வு நூல்களையும் அரசறிவியல் மூலதத்துவங்கள், அரசறிவியல் கோட்பாடுகள், இலங்கையின் அரசியல் நிகழ்கால நிகழ்வுகள் 1995 உட்படப் பல அரசறிவியல் நூல்களையும் இலக்கிய விருந்து, இலக்கிய உலா, நூல்தேட்டம் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெரு நதி உட்படப் பல இலக்கிய மற்றும் இலக்கிய திறனாய்வு நூல்களையும் பொது அறிவுச்சரம் (தொகுதி 01 - தொகுதி 06) உட்படப் பல பொது அறிவு நூல்களையும் கிராமத்தின் ஒரு தீபம், எம். வை. அப்துல் ஹமீத் உட்பலப் பல பல்துறை நூல்களையும் பாடவழிக்காட்டி நூல்களையும் எழுதியுள்ளார்.

இவர் விசேட கௌரவ விருது, இலக்கியச் செம்மல் விருது, ரத்னதீப விருது, விசேட ரத்னதீப விருது, கலாபூசணம் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளதோடு பல இதழ்களும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் பிரசுரித்துக் கௌரவப்படுத்தியுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 126-129
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 54-60
  • நூலக எண்: 2629 பக்கங்கள் 05-06