"ஆளுமை:புனிதமலர், இராஜேஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=புனிதமலர், இராஜேஸ்வரன்|
 
பெயர்=புனிதமலர், இராஜேஸ்வரன்|
 
தந்தை=அப்பையா|
 
தந்தை=அப்பையா|

04:14, 2 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் புனிதமலர், இராஜேஸ்வரன்
தந்தை அப்பையா
தாய் புனிதவதி
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புனிதமலர், இராஜேஸ்வரன் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்பையா; தாய் புனிதவதி. இவர் தனது ஆரம்பக் கல்வியை அளவெட்டி ஞானோதயா வித்தியாசாலையில் கற்றுப் பின்னர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கற்றுத்தேறினார்.

சிறுவயது முதல் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், இளமைக் காலத்தில் கலா சேவா சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் பங்குபற்றியுள்ளார். இவர் கவிஞர் க. ஆதவன், க.நிர்மலா, உ.சேரன் போன்ற இளைஞர்களுடன் இணைந்து ஞாயிறு என்னும் கையேட்டுப் பிரதியை 1973 முதல் 1976 வரை நடாத்தி வந்துள்ளார். பின்னர் 1986 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டுக்குச் சென்று மண், புலம், ஈழம் ஆகிய சஞ்சிகைகளில் தனது ஆக்கங்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 72-74