"ஆளுமை:பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=பாலச்சந்திரன்| | பெயர்=பாலச்சந்திரன்| | ||
தந்தை=நீக்கிளஸ் மரியதாஸ்| | தந்தை=நீக்கிளஸ் மரியதாஸ்| |
03:41, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பாலச்சந்திரன் |
தந்தை | நீக்கிளஸ் மரியதாஸ் |
பிறப்பு | 1952.06.17 |
ஊர் | நாவந்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலச்சந்திரன், நீக்கிளஸ் மரியதாஸ் (1952.06.17 - ) யாழ்ப்பாணம், நாவந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நீக்கிளஸ் மரியதாஸ். க. பொ. த. உயர்தரம் வரை கல்வி கற்ற இவர், பாடசாலைக் காலத்தில் இருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
இவர் ஷேக்ஸ்பியரின் வெனிசின் வர்த்தகன் என்னும் நாடகத்தில் பெண் பாத்திரம் ஏற்று நடித்ததுடன் யாழ்ப்பாண மறைக்கல்வி நிலைய நிகழ்ச்சிகளுக்காக இலங்கை வானொலி கத்தோலிக்கச் சேவையின் புதிய உலகம், சிறுவர் உலகம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ரூபவாஹினி தொலைக்காட்சியின் தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கான புது வரலாறு நாமே படைப்போம் என்னும் நாடாவிலும் பாடியுள்ளார். மேலும் 1997 இல் மன்னார் விடத்தல்தீவில் கல்வாரியில் கருணை மழை என்னும் நாடகத்தையும் 1999 இல் ஞானசௌந்தரி என்னும் இசை நாடகத்தையும் 2004 இல் கல்வாரி கண்ட கடவுள் என்னும் நாடகத்தையும் நெறியாள்கை செய்து மேடையேற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 195