"ஆளுமை:திருஞானசம்பந்தன், நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

22:33, 1 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தன்
தந்தை நாகலிங்கம்
தாய் பொன்னம்மா
பிறப்பு 1916
ஊர் காரைநகர்
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தன், நாகலிங்கம் (1916 - ) காரைநகர், வலந்தலையைச் சேர்ந்த மலேசியாவில் பிறந்த வைத்தியர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் பொன்னம்மா. இவர் வைத்தியரான திருஞானசம்பந்தன், டாக்டர் என். ரி. சம்பந்தன் என அழைக்கப்பட்டார். இவர் தனது ஆரம்பக்கல்வியை மலேசியாவில் புனித ஜோர்ஜ் பாடசாலையில் கற்றார். பின்னர் இலங்கை வந்து கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் உயர் கல்வியைக் கற்று 1943 இல் வைத்தியக்கலாநிதிப் பட்டம் பெற்றார். அதன் பின் வைத்தியத்துறையில் F.R.C.S. (Ed in), FRCS (GLAS) ஆகிய பட்டங்களை 1946 இல் பெற்றார்.

இதன் பின் 1943-1944 வரை கண்டி அரசினர் வைத்தியசாலையில் பணிபுரிந்து யாழ்ப்பாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பில் 1944 ஆம் ஆண்டு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இணைந்து 30 வருடங்களுக்கு மேலாகச் சேவையாற்றியிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 322-324