"ஆளுமை:செல்லத்துரை, வல்லிபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=செல்லத்துரை| | பெயர்=செல்லத்துரை| | ||
தந்தை=வல்லிபுரம்| | தந்தை=வல்லிபுரம்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
+ | செல்லத்துரை, வல்லிபுரம் (1935.05.27 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம். இவர் தனது ஆரம்பக் கல்வியை கொல்லங்கலட்டி விநாயகர் வித்தியாசாலையிலும் தரம் 6 தொடக்கம் க.பொ.த. சாதாரணதரம் வரை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றார். மாவிட்டபுரம் நாதஸ்வரமேதை சோ. உருத்திராபதியிடம் இசையைப் பயின்ற இவர், வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைகளின் ஆறு பகுதிகளிலும் சித்தியெய்தினார். தொடர்ந்து இந்தியா சென்று ரி. கே. ரங்காச்சாரியாரிடமும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். மலையகத்திலும் இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் 1996 தொடக்கம் 2001 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையில் வாய்ப்பாட்டிற்கான வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். | ||
− | + | இவர் 1961 ஆம் ஆண்டில் இசைமணித் தேர்வில் முதற்பிரிவில் சித்தி பெற்றார். இவரது முதல் இசை அரங்கேற்றம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் 1962 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அதிபர் ரி. ரி. ஜெயரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து 1962 ஆம் ஆண்டிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியிருக்கின்றார். | |
− | + | இவர் கானாம்ருத பூஷணம், அச்சூர்க்குரிசில், கலாபூஷணம் ஆகிய கெளரவங்களுடன் 2012 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். | |
− | |||
− | இவர் கானாம்ருத பூஷணம், அச்சூர்க்குரிசில், கலாபூஷணம் ஆகிய கெளரவங்களுடன் | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== |
00:08, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்லத்துரை |
தந்தை | வல்லிபுரம் |
பிறப்பு | 1935.05.27 |
ஊர் | தெல்லிப்பளை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லத்துரை, வல்லிபுரம் (1935.05.27 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம். இவர் தனது ஆரம்பக் கல்வியை கொல்லங்கலட்டி விநாயகர் வித்தியாசாலையிலும் தரம் 6 தொடக்கம் க.பொ.த. சாதாரணதரம் வரை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றார். மாவிட்டபுரம் நாதஸ்வரமேதை சோ. உருத்திராபதியிடம் இசையைப் பயின்ற இவர், வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைகளின் ஆறு பகுதிகளிலும் சித்தியெய்தினார். தொடர்ந்து இந்தியா சென்று ரி. கே. ரங்காச்சாரியாரிடமும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். மலையகத்திலும் இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் 1996 தொடக்கம் 2001 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறையில் வாய்ப்பாட்டிற்கான வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 1961 ஆம் ஆண்டில் இசைமணித் தேர்வில் முதற்பிரிவில் சித்தி பெற்றார். இவரது முதல் இசை அரங்கேற்றம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் 1962 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அதிபர் ரி. ரி. ஜெயரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து 1962 ஆம் ஆண்டிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியிருக்கின்றார்.
இவர் கானாம்ருத பூஷணம், அச்சூர்க்குரிசில், கலாபூஷணம் ஆகிய கெளரவங்களுடன் 2012 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 66-67