"ஆளுமை:சிவசுப்பிரமணியம், தம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சிவசுப்பிரமணியம்|
 
பெயர்=சிவசுப்பிரமணியம்|
 
தந்தை=தம்பு|
 
தந்தை=தம்பு|

03:17, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவசுப்பிரமணியம்
தந்தை தம்பு
பிறப்பு 1944.02.24
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், தம்பு (1944.02.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பு. இவர் ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாசன வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியைக் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

1965 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் எழுத்தாளராக நியமனம் பெற்ற இவர், 1975 இல் இறைவரி உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்று 1985 இல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து 1987 முதல் 1989 வரை மாலைதீவில் மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராகப் பணியாற்றினார். மேலும் இவர் தமிழ்த்தென்றல் என்ற இதழின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் சொந்தங்கள், முதுசம் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளதோடு கற்பகம் இதழில் வந்த சிறுகதைகள், தூரத்துக்கோடை இடிகள், அப்பா ஆகிய சிறுகதைகளைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார்.

இவர் சொல்லின் செல்வர் என்ற பட்டத்தையும் ஆக்க இலக்கியத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதையும் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 362
  • நூலக எண்: 9014 பக்கங்கள் 16-20