"ஆளுமை:மாரிமுத்து, சித்திவினாயகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=மாரிமுத்து| | பெயர்=மாரிமுத்து| | ||
தந்தை=சித்திவினாயகம்| | தந்தை=சித்திவினாயகம்| |
05:08, 27 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மாரிமுத்து |
தந்தை | சித்திவினாயகம் |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாரிமுத்து, சித்திவினாயகம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர், கவிஞர், கலை - இலக்கிய கட்டுரையாளர். இவரது தந்தை சித்திவினாயகம். இவர் சித்திவினாயகம், ஈழம்ராஜி, சித்தி, ரமோனா போன்ற புனைபெயர்களில் எழுத்துலகில் வலம் வருகின்றார். கிளிநொச்சி மாவட்டத்தில் இவர் ஆரம்ப மற்றும் உயர்கல்வியைக் கற்றுக் கூட்டுறவுக் கல்லூரியின் கற்கை நெறியில் தேர்ந்து கணக்கியற் பதிவாளரானார். பின் கொழும்பில் கணக்கியற் பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் நாட்டுப் பிரச்சினையின் காரணமாக ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.
இவர் ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவர். இவரின் கவிதைகள் "மரணத்துள் வாழ்வோம்" என்னும் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் 'இளம் அருவி' சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984 இல் அதனை வெளியீடு செய்தார். அங்கிருந்த காலத்தில் "தீ" என்னும் கவிதைத்தொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் இருந்து கனடாவிற்குக் குடிபெயர்ந்து அங்கும் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட "அரும்பு" என்னும் சிறுகதைத் தொகுதியில் இவரின் "குறி" என்ற சிறுகதை இடம்பெற்றிருந்தது. இச்சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகிப் பயன்பாடுமிக்க கவிதையரங்குகளை நடத்தினார். பத்திரிகையில் தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி, நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளமாகத் திகழ்கின்றார். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் இவரின் கவிதைத்தொகுப்பு சென்னையில் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 142