"ஆளுமை:சிதம்பரப்பிள்ளை, வே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சிதம்பரப்பிள்ளை|
 
பெயர்=சிதம்பரப்பிள்ளை|
 
தந்தை=|
 
தந்தை=|

03:07, 27 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிதம்பரப்பிள்ளை
பிறப்பு
இறப்பு 1955.11.15
ஊர் புலோலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பரப்பிள்ளை, வே. ( - 1955.11.15) யாழ்ப்பாணம், புலோலியூரைச் சேர்ந்த புலவர். இவர் தனது பதின்மூன்றாவது வயதில் கண்பார்வையை முற்றாக இழந்த போதும் கல்வியறிவைப் பெறுவதற்காக, பிறர் வாசிக்கக் கேட்டும் அறிஞர் படிப்பிக்கும் இடங்களிலும் புராணபடனம் நடைபெறும் இடங்களிலும் போய்க் கேட்டும் மனதிற் பதித்துப் புலமை படைத்தவரானார்.

புராணங்களுக்குப் பொருள் கூறுவதிலும் பாக்கள் இயற்றுவதிலும் திறமை படைத்தவராக விளங்கிய இவர், மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைக் கற்பிப்பதற்காகத் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றினையும் நடாத்தி வந்தார். இவர் கந்தபுரணத்துச் சூரபன்மன் வதைப் படலத்துக்கு சிறந்த உரையொன்றினை எழுதியுள்ளார். அத்துடன் கந்தபுராணத்துக்கும் தெய்வானை திருமணப் படலத்துக்கும் திருவானைக்காப்புராணத்துக்கும் உரை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 113-114