"ஆளுமை:சண்முகராசா, சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சண்முகராசா|
 
பெயர்=சண்முகராசா|
 
தந்தை=சின்னத்துரை|
 
தந்தை=சின்னத்துரை|

23:12, 25 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சண்முகராசா
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1942.02.19
ஊர் கொக்குவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகராசா, சின்னத்துரை (1942.02.19 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சித்திரபாட விஷேட ஆசிரியராகப் பயிற்சி முடித்துக் கொழும்பு அரசினர் நுண்கலைக் கல்லூரியில் ஓவிய டிப்ளோமாப் பட்டம் பெற்றதுடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சித்திரபாட விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் உருவத்தைத் தட்டச்சினால் பதித்துக் கொடுத்ததன் மூலம் ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்களின் நேரடிப் பாராட்டுதலைப் பெற்றார். அத்துடன் 1984 ஆம் ஆண்டு பேராதனை ஆங்கில ஆசிரியர் கலாசாலையில் முன்னாள் கல்வி அமைச்சரைப் பார்த்து ஓவியமாக வரைந்தமைக்காகப் பாராட்டும் பெற்றார். ஓவியம், சிற்பம், மரத்தில் செதுக்கி வடிவமைத்தல், வீட்டு அலங்காரம், மனையியல் போன்ற கலை ஆற்றுகைகளுக்காகப் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ள இவர், சித்திரதத்துவஞானி பட்டத்தைக் கொண்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 190
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 242