"ஆளுமை:கந்தையா, வல்லிபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=கந்தையா| | பெயர்=கந்தையா| | ||
தந்தை=வல்லிபுரம்| | தந்தை=வல்லிபுரம்| |
05:17, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கந்தையா |
தந்தை | வல்லிபுரம் |
பிறப்பு | 1924.01.14 |
இறப்பு | 2006 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தையா, வல்லிபுரம் (1924.01.14 - 2006) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் அரியாலை பார்வதி வித்தியாசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். 1946 இல் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் மரவேலைப்பாட ஆசிரியராக நியமனம் பெற்று ஒன்பது ஆண்டுகள் அங்கு பணியாற்றி, பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கைவினைத்திறன் பாட உதவி ஆசிரியராகப் பணியாற்றி மீண்டும் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்பித்தலைத் தொடர்ந்தார். கல்வித் திணைக்களத்தால் யாழ்ப்பாணத் தொழில்நுட்பக் கல்லூரியின் போதனாசிரியராக நியமிக்கப்பட்டார். முப்பத்தெட்டு ஆண்டுகள் சேவைபுரிந்த பின் ஒய்வுபெற்ற இவர், சிற்பக்கலைத் தொழிலில் முழுமையாக ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்தில் அரியாலை சித்தி விநாயகர் ஆலயம், கொழும்புத்துறை சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயம், பிரப்பன் குளம் மகாமாரி அம்மன் ஆலயம், அளவெட்டி நாகேஸ்வரம், நாயன்மார்க்கட்டு இராஜராஜேஸ்வரி ஆலயம், நல்லூர் கற்பக விநாயகர் ஆலயம், அரியாலை வெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றில் காணப்படும் பல வாகனங்களை இவர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு அரியாலை சனசமூக நிலையம் இவருக்குச் சிற்பக் கலாநிதிப் பட்டத்தையும், யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரி கலைப் பேராசான் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்தது. 2006 ஆம் ஆண்டு இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இவரின் கலைப்பணியைப் பாராட்டிக் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவித்தது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 201