"ஆளுமை:அருளானந்தன், பாலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=அருளானந்தன்|
 
பெயர்=அருளானந்தன்|
தந்தை-பாலசிங்கம்|
+
தந்தை=பாலசிங்கம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1961.10.18|
 
பிறப்பு=1961.10.18|

21:58, 18 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அருளானந்தன்
தந்தை பாலசிங்கம்
பிறப்பு 1961.10.18
ஊர் காரைநகர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளானந்தன், பாலசிங்கம் (1961.10.18 - ) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு கவிஞன். இவரது தந்தை பாலசிங்கம். கவிதை புனைதல், கவியரங்க ஆற்றுகை, சமயப் பேருரை, கட்டுரைகள் எழுதுதல், வானொலி, தொலைக்காட்சி வர்ணணை அறிவிப்பாளர், இலக்கியத் திறனாய்வு, சமயச் சொற்பொழிவு ஆகிய கலை இலக்கியச் செயற்பாடுகளில் இவர் முதன்மை பெற்று விளங்குகின்றார்.

மதுரகவி காரை எம்.பி.அருளானந்தம் என்னும் தன் சொந்தப்பெயரிலும், தமிழானந்த பாரதி, ஈழத்தரசன், தமிழிளம் பரிதி, சங்குநாதன் என்னும் புனைப்பெயர்களிலும் ஈழத்தில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தன் கவித்திறனை வெளிப்படுத்தி வரும் இவர் யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியவராவார். காரைநகர் திருமணற்காடு அருள்மிகு ஶ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்பாளைச் சிறு வயது முதல் வழிபட்டு வரும் இவர் அம்பாளின் கடாட்சமே தன்னைக் கவிதையெழுதத் தூண்டியதாகக் கூறியதோடு இவர் வேறு யாரையும் குருவாகக் கொள்ளவில்லை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், உலகத் தமிழர் வானொலி, அனைத்துலக வானொலி, கனேடிய தமிழ் வானொலி அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலி ஆகியவற்றின் வெளிக்கள வர்ணணையாளராகவும் இவர் செயற்பட்டதோடு இலங்கை அமைச்சினால் அகில இலங்கைச் சமாதான நீதவானாகவும் நியமிக்கப்பட்டார். மதுரகவி, கவிமாமணி, கவியரசு, மகாகவி சாகரம், சிவநெறித்தொண்டர், செஞ்சொல் ஞானவாருதி, வர்ணனைக் கலாநிதி ஆகிய பட்டங்களைத் தேவஸ்தான பீடங்கள் இவருக்கு வழங்கியுள்ளது. இவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் முன்னாள் முதல்வரான கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதனைத் தலைவராகக் கொண்ட பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் மணிவிழாச் சபையின் செயலாளராகவிருந்து சண்முகதரிசனம் நூலினை வெளியிட்டுப் பாராட்டுப் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 32