"ஆளுமை:நித்தியகீர்த்தி, தெட்சணாமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=நித்தியகீர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | நித்தியகீர்த்தி, தெட்சணாமூர்த்தி (1947.03.04 - 2009.10.15) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தெட்சணாமூர்த்தி. இவர் தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதை மூலம் | + | நித்தியகீர்த்தி, தெட்சணாமூர்த்தி (1947.03.04 - 2009.10.15) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தெட்சணாமூர்த்தி. இவர் தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதை மூலம் அறிமுகமாகித் தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்த போதும் இலக்கிய உலகோடு இணைந்தே காணப்பட்டார். இவர் நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராகித் தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றித் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்தார். |
− | இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், | + | இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரிப் பத்திரிகைகளில் பிரசுரமானதுடன் புலம்பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்த காலங்களிலும் ஈழத்துப் பத்திரிகைகளிலும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இவர் மீட்டாத வீணை, தொப்புள் கொடி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது தங்கப் பதக்கம், தங்கம் என் தங்கை, நீதி பிறக்குமா?, பாட்டாளி, பிணம், மரகதநாட்டு மன்னன், வாழ்வு மலருமா ஆகிய நாடகங்கள் ஈழத்திலும் கூடு தேடும் பறவைகள், மரணத்தில் சாகாதவன் போன்ற நாடகங்கள் நியூசிலாந்திலும் பறந்து செல்லும் பறவைகள், ஊருக்குத் தெரியாது, வேங்கை நாட்டு வேந்தன் ஆகிய நாடகங்கள் அவுஸ்திரேலியாவிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. |
00:04, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நித்தியகீர்த்தி |
தந்தை | தெட்சணாமூர்த்தி |
பிறப்பு | 1947.03.04 |
இறப்பு | 2009.10.15 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நித்தியகீர்த்தி, தெட்சணாமூர்த்தி (1947.03.04 - 2009.10.15) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தெட்சணாமூர்த்தி. இவர் தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதை மூலம் அறிமுகமாகித் தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்த போதும் இலக்கிய உலகோடு இணைந்தே காணப்பட்டார். இவர் நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராகித் தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றித் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்தார்.
இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரிப் பத்திரிகைகளில் பிரசுரமானதுடன் புலம்பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்த காலங்களிலும் ஈழத்துப் பத்திரிகைகளிலும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இவர் மீட்டாத வீணை, தொப்புள் கொடி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது தங்கப் பதக்கம், தங்கம் என் தங்கை, நீதி பிறக்குமா?, பாட்டாளி, பிணம், மரகதநாட்டு மன்னன், வாழ்வு மலருமா ஆகிய நாடகங்கள் ஈழத்திலும் கூடு தேடும் பறவைகள், மரணத்தில் சாகாதவன் போன்ற நாடகங்கள் நியூசிலாந்திலும் பறந்து செல்லும் பறவைகள், ஊருக்குத் தெரியாது, வேங்கை நாட்டு வேந்தன் ஆகிய நாடகங்கள் அவுஸ்திரேலியாவிலும் மேடையேற்றப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4696 பக்கங்கள் 43