"ஆளுமை:சுதாராஜ், சிவசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுதாராஜ் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசாமி; தாய் இராசம்மா. இவர் இராஜசிங்கம் சிவசாமி என்ற இயற்பெரைக் கொண்டவர் ஆவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிறீஸ், யேமன், அல்ஜீரியா, இந்தோனீசியா எனப் பல நாடுகளிலும் பணிபுரிந்து பின்னர் புத்தளத்தில் கடமையாற்றிய இவர் அங்கு புத்தகக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்துள்ளார்.  
+
சுதாராஜ், சிவசாமி யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசாமி; இவரது தாய் இராசம்மா. இவரின் இயற்பெயர் இராஜசிங்கம். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றுப் பின்னர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிறீஸ், யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளில் பணிபுரிந்து பின்னர் புத்தளத்தில் கடமையாற்றிய இவர், அங்கு ஒரு புத்தகக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்துள்ளார்.  
  
இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். இவரது முதல் சிறுகதைத் தொகுதி பலாத்காரம் 1977ஆம் ஆண்டு வெளி வந்தது. பலாத்காரம், கொடுத்தல், ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள், தெரியாத பக்கங்கள், சுதாராஜின் சிறுகதைகள், காற்றோடு பேசுதல் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும், இளமைக் கோலங்கள் என்ற நாவலையும், காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதை, பறக்கும் குடை, கோழி அம்மாவும் மயில் குஞ்களும், குட்டிப் பூனையும் கெட்டிக்காரச் சுட்டிப் பையனும் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் மேலும் பல் நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
+
இவர் தனது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு இவரின் முதற் சிறுகதைத் தொகுதியான பலாத்காரம் வெளிவந்ததுடன் கொடுத்தல், ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள், தெரியாத பக்கங்கள், சுதாராஜின் சிறுகதைகள், காற்றோடு பேசுதல் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் இளமைக் கோலங்கள் என்ற நாவலையும், காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதை, பறக்கும் குடை, கோழி அம்மாவும் மயில் குஞ்களும், குட்டிப் பூனையும் கெட்டிக்காரச் சுட்டிப் பையனும் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் மேலும் பல் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
  
1981-1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய விருது, இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் பட்டம் ஆகிய விருதுகள் கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்புக்கும் 1989ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான யாழ் இலக்கிய வட்டத்தின் விருது ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்கும், விபவி கலாசார மையத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது தெரியாத பக்கங்கள் எனும் சிறுகதைத் தொகுப்புக்கும் இவர் பெற்றுள்ளார்.   
+
இவர் 1981-1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்களுக்குச் சாகித்திய விருது, இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் பட்டம் ஆகிய விருதுகள் பெற்றார். மேலும் கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்புக்கு 1989 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான யாழ் இலக்கிய வட்டத்தின் விருதும் ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்கு விபவி கலாச்சார மையத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதும் தெரியாத பக்கங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்புக்கும் விருது பெற்றுள்ளார்.   
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

00:01, 23 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுதாராஜ்
தந்தை சிவசாமி
தாய் இராசம்மா
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதாராஜ், சிவசாமி யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசாமி; இவரது தாய் இராசம்மா. இவரின் இயற்பெயர் இராஜசிங்கம். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றுப் பின்னர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். ஈராக், குவைத், பாகிஸ்தான், இத்தாலி, கிறீஸ், யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளில் பணிபுரிந்து பின்னர் புத்தளத்தில் கடமையாற்றிய இவர், அங்கு ஒரு புத்தகக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்துள்ளார்.

இவர் தனது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். 1977 ஆம் ஆண்டு இவரின் முதற் சிறுகதைத் தொகுதியான பலாத்காரம் வெளிவந்ததுடன் கொடுத்தல், ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள், தெரியாத பக்கங்கள், சுதாராஜின் சிறுகதைகள், காற்றோடு பேசுதல் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் இளமைக் கோலங்கள் என்ற நாவலையும், காட்டில் வாழ்ந்த கரடி நாட்டுக்கு வந்த கதை, பறக்கும் குடை, கோழி அம்மாவும் மயில் குஞ்களும், குட்டிப் பூனையும் கெட்டிக்காரச் சுட்டிப் பையனும் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் மேலும் பல் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவர் 1981-1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்களுக்குச் சாகித்திய விருது, இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சின் இலக்கிய வித்தகர் பட்டம் ஆகிய விருதுகள் பெற்றார். மேலும் கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்புக்கு 1989 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான யாழ் இலக்கிய வட்டத்தின் விருதும் ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்கு விபவி கலாச்சார மையத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதும் தெரியாத பக்கங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்புக்கும் விருது பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 193-197
  • நூலக எண்: 2051 பக்கங்கள் 11-18