"ஆளுமை:ஜீவகுமாரன், விஸ்வலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=ஜீவகுமாரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:10, 11 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஜீவகுமாரன் |
பிறப்பு | |
ஊர் | சங்கானை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜீவகுமாரன், வி. யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் 1988ம் ஆண்டு தொடக்கம் டென்மார்க் அரச நூலகத்தில் வெளிநாட்டவர்களுக்கான பிரிவில் தமிழ் பகுதியின் பொறுப்பாளராகவும் ஆலோசகராகவும் கடமை புரிந்துள்ளதோடு கணனித்துறையில் தேர்ச்சி பெற்று டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த தொழில் நுட்பப்பிரிவின்(GIS – Geographic Information System) பொறுப்பாளராகவும் விளங்கியுள்ளார்.
இவர் 2008ல் தனது 50 வது வயதில் யாவும்கற்பனைஅல்ல என்ற சிறுகதை–கவிதை – உரை வீச்சு தொகுப்பின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். மக்கள் மக்களால் மக்களால் என்ற நாவலும் சங்கானைச் சண்டியன் என்ற 10 சிறுகதைகளும் 2 குறுநாவல்களின் தொகுப்பும் ஜேர்மனிய கரப்பான் பூச்சிகள், ஜீவகுமாரன் கதைகள் போன்ற சிறுகதை தொகுப்புக்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 14687 பக்கங்கள் 27-34