"ஆளுமை:றஜீவன், குலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=றஜீவன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:49, 7 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் றஜீவன்
தந்தை குலசிங்கம்
தாய் இந்திராதேவி
பிறப்பு 1976.09.25
ஊர் ஏழாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றஜீவன், குலசிங்கம் (1976.09.25 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை குலசிங்கம்; தாய் இந்திராதேவி. 2002இல் சைவப் புலவர் பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டமும் பெற்றுள்ள இவர் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளதோடு பல்கலைக்கழக வெளிவாரிமாணவர்க்கான கற்கை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பங்குபற்றியுள்ள இவர் நான்கு கவிதை நூல்களை வெளியிட்டும் ஐந்து நூல்களை பதிப்பித்துமுள்ளார். மேலும் சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனத்தையும் இயக்கி வந்துள்ளார். இவர் சைவசித்தாந்தம் எனும் இதழை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 66-67