"ஆளுமை:மஹாலிங்கசிவம், இராசையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மஹாலிங்கசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 2: வரிசை 2:
 
பெயர்=மஹாலிங்கசிவம்|
 
பெயர்=மஹாலிங்கசிவம்|
 
தந்தை=இரசையா|
 
தந்தை=இரசையா|
தாய்=இராம்மா|
+
தாய்=இராசம்மா|
 
பிறப்பு=1933.01.12|
 
பிறப்பு=1933.01.12|
 
இறப்பு=|
 
இறப்பு=|

03:20, 16 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மஹாலிங்கசிவம்
தந்தை இரசையா
தாய் இராசம்மா
பிறப்பு 1933.01.12
ஊர் உடுப்பிட்டி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஹாலிங்கசிவம், இராசையா (1933.01.12 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை இராசையா; தாய் இராசம்மா. இவர் திருகோணமலை ஶ்ரீ சண்முகா வித்தியாலயத்திலும் இந்துக் கல்லூரியிலும் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து 1951இல் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி 1955இல் கணிதத்தில் கௌரவப்பட்டத்தை இவர் பெற்றதோடு பொதுநலவாயப் புலமைப் பரிசிலினைப் பெற்றுக் கொண்டு கனடா - ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் 1967இல் பொருளாதார துறையில் முதுமாணிப் பட்டத்தையும் 1969இல் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

1955இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கணிதத்திற்கான வருகை தரு விரிவுரையாளராக கடமையாற்றிய இவர் கொட்டாஞ்சேனை சென்ற் பெனடிக் கல்லூரியில் கணித ஆசிரியராகவும் 1956இல் இலங்கை தொழில்நுட்ப கல்லூரியில் கணித போதனாசிரியராகவும் திட்டமிடல் செயலகத்தில் குடிசனப் புள்ளி விபரத் திணைக்களத்தின் ஆய்வாலராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் உலக உணவு விவசாயத்தாபனம் பாகிஸ்தானில் தனது ஆலோசகராக இவரை நியமித்தோடு 1987இல் அரசியல் அமைப்பிற்கான 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சூத்திரத்தை வடிவமைப்பதில் நிதி ஆணைக்குழுவின் பொருளியலளராக இவர் கடமையாற்றி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11851 பக்கங்கள் 15-18