"ஆளுமை:சதாசிவம், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சதாசிவம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:14, 8 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சதாசிவம் |
தந்தை | ஆறுமுகம் |
பிறப்பு | 1926.15.02 |
ஊர் | அராலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சதாசிவம், ஆறுமுகம் (1926.02.15 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும், ஆனந்தாக் கல்லூரியிலும் கல்வி கற்றதோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் முதுகலைமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். 1952இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் 1956இல் முதுநிலை விரிவுரையாளராகவும் இலங்கைப் பல்கலைக்கழக கொழும்புப் பிரிவின் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர் 1970இல் தமிழ் பேராசிரியரானார்.
பன்மொழிப் புலமை மிக்கவரான இவர் தமிழ்மொழி, வடமொழி, பாளிமொழி, மலையாள மொழி ஆகிய மொழிகளைக் கற்றார். ஈழத்தில் எழுந்த பள்ளு இலக்கியங்களில் ஒன்றாகிய ஞானப்பள்ளுவை திருத்திய பதிப்பாக இவர் வெளிவரச் செய்ததோடு தமிழ் சங்கத்தின் தலைவராகவும், செந்தமிழ் குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மலேசியாப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், எடின்பரோப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கலாநிதிப்பட்ட ஆய்வேடுகளை வெளிவாரித் தேர்வாளராக மதிப்பீடு செய்துள்ளார். இவரது முயற்சியினாலேயே கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகம் கற்கை நெறி தொடங்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15515 பக்கங்கள் 21-23