"ஆளுமை:நற்குணசேகரன், அப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நற்குணசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:24, 21 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நற்குணசேகரன்
தந்தை அப்பையா
பிறப்பு 1935.05.10
ஊர் சுதுமலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நற்குணசேகரன், அப்பையா (1935.05.10 - ) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை அப்பையா. இவர் 1948ஆம் ஆண்டிலிருந்து நாடகம், சினிமா ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் சுதுமலை, இளவாலை, திருநெல்வேலி, நவாலி, கொழும்பு, வவுனியா, அனுராதபுரம், கிளிநொச்சி, அராலி போன்ற இடங்களில் பாவிகள் யார், ராஜ குரு, பிரண்ட்ராம், பொம்மைகள், சிதறிய சிலம்புகள், தாசியும் தவசியும், சோக்கிறட்டீஸ், போர்த்துக்கேய தளபதி, நல்லை தந்த வல்லவன், மனிதன் யாருக்காக, அழுதான், சிவகாமியின் சபதங்கள், சிதைந்த உள்ளங்கள் போன்ற நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக இயக்குநர் மாமணி, நாடக சிகாமணி, கலைஞாயிறு ஆகிய பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 186