"ஆளுமை:வேலாயுதப்பிள்ளை, குமாரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேலாயுதப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

00:52, 5 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேலாயுதப்பிள்ளை
தந்தை குமாரசாமி
பிறப்பு 1909.05.22
ஊர் மீசாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதப்பிள்ளை, குமாரசாமி (1909.05.22 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை குமாரசாமி. இவர் சிறுவயதிலிருந்தே இசைத்துறையில் ஆர்வம் கொண்டு விளங்கியதோடு தனது இசை ஆர்வத்தினால் இந்தியா சென்று அங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 4 வருடம் இசைத்துறையில் தனக்கு விரும்பிய வயலின் வாத்தியத்தைக் கற்றறிந்து பரதநாட்டியத்தினையும் கற்று அதிலும் சித்திப் பெற்று விளங்கினார்.

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலை, பளை மகா வித்தியாலயம், மீசாலை விக்னேஸ்வர வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கல்வி கற்பித்துள்ள இவர் சங்கீத சாஸ்திரம் எனும் இசை இலக்கண நூலை வெளியிட்டுள்ளார்.

இவரது திறமைக்காக சங்கீத பூஷணம் எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 118