"ஆளுமை:அசோகாம்பிகை, யோகராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அசோகாம்பிகை யோகராஜா (1949.03.02 - ) மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் அறியப்படுபவர்; மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இளையதம்பி; தாய் கனகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ் பெண்கள் படசாலையிலும், உயர்தரக் கல்வியினை மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியலயத்திலும் பெற்றார். 1977ஆம் ஆண்டில் ஆசிரிய சேவையில் இணைந்த இவருக்கு மண்டூர் மகாவித்தியலயத்தில் முதல் நியமனம் கிடைத்தது. மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார். இறுதியாக மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த காலத்தில் 2009.03.01 அன்று ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.  
+
அசோகாம்பிகை யோகராஜா (1949.03.02 - ) மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் கனகம்மா. இவர்  மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ் பெண்கள் படசாலையிலும், உயர்தரக் கல்வியினை மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியலயத்திலும் பெற்றார். 1977ஆம் ஆண்டில் ஆசிரிய சேவையில் இணைந்த இவருக்கு மண்டூர் மகாவித்தியலயத்தில் முதல் நியமனம் கிடைத்தது. மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார். இறுதியாக மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த காலத்தில் 2009.03.01 அன்று ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.  
  
எழுத்துருவில் பிரசுமான இவரது முதலாவது ஆக்கம் ''அம்மா சிரிக்கிறாள்'' எனும் தலைப்பில் தாய்நாடு சஞ்சிகையில் 1970அம் ஆண்டு வெளிவந்தது. ஆரம்ப காலங்களில் இவரின் இலக்கியச் சேவைகளில் அதிகமான பங்களிப்பு இலங்கை வானொலியுடனேயே இருந்துள்ளது. இலங்கை வானொலியில் ஆரம்பகாலத்து மெல்லிசை நிகழ்ச்சிக்கு இவர் அனேக பாடல்களை எழுதியுள்ளார். ''மண்டூர் அசோகா'' எனும் பெயரில் இவர் அதிகமான ஆக்கங்களை படைத்துள்ளதோடு ''ரேவதி'', ''செந்தில் பிரியா'' ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.  
 
23:30, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அசோகாம்பிகை யோகராஜா
தந்தை இளையதம்பி
தாய் கனகம்மா
பிறப்பு 1949.03.02
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அசோகாம்பிகை யோகராஜா (1949.03.02 - ) மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் கனகம்மா. இவர் மண்டூர் அசோகா என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ் பெண்கள் படசாலையிலும், உயர்தரக் கல்வியினை மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியலயத்திலும் பெற்றார். 1977ஆம் ஆண்டில் ஆசிரிய சேவையில் இணைந்த இவருக்கு மண்டூர் மகாவித்தியலயத்தில் முதல் நியமனம் கிடைத்தது. மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றியுள்ளார். இறுதியாக மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த காலத்தில் 2009.03.01 அன்று ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

எழுத்துருவில் பிரசுமான இவரது முதலாவது ஆக்கம் அம்மா சிரிக்கிறாள் எனும் தலைப்பில் தாய்நாடு சஞ்சிகையில் 1970அம் ஆண்டு வெளிவந்தது. ஆரம்ப காலங்களில் இவரின் இலக்கியச் சேவைகளில் அதிகமான பங்களிப்பு இலங்கை வானொலியுடனேயே இருந்துள்ளது. இலங்கை வானொலியில் ஆரம்பகாலத்து மெல்லிசை நிகழ்ச்சிக்கு இவர் அனேக பாடல்களை எழுதியுள்ளார். மண்டூர் அசோகா எனும் பெயரில் இவர் அதிகமான ஆக்கங்களை படைத்துள்ளதோடு ரேவதி, செந்தில் பிரியா ஆகிய பெயர்களிலும் எழுதி வந்துள்ளார்.

கொன்றைப்பூக்கள், சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி போன்ற சிறுகதைகளையும், பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவரின் இலக்கியச் சேவைகளைக் கருத்திற் கொண்டு 1995இல் நடைப்பெற்ற மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும், 1997இல் மண்டூர் கலை இலக்கிய அவையினர் பாரட்டு விழா நடத்தி பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பாட்டார். மேலும் 2001இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் தமிழருவி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 106-110