"ஆளுமை:வரதராஜன், சுந்தரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வரதராஜன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:18, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வரதராஜன்
தந்தை சுந்தரமூர்த்தி
பிறப்பு 1955.05.02
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராஜன், சுந்தரமூர்த்தி (1955.05.02 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சுந்தரமூர்த்தி. தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பளை சைவப்பிரகாச கல்லூரியிலும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்ற இவர் தனது ஆரம்ப இசைப் பயிற்சியை தனது பேரனாரிடமும், க. பா. சின்னராசா அவர்களிடமும் பயின்றார். மேலும் தனது மிருதங்கக் கலையை இந்தியாவின் மிருதங்க பேரரசன் ஏ. எஸ். இராமநாதன் அவர்களிடமும் பயின்றார்.

1980ஆம் ஆண்டு ஏ. திலகேஸ்வரன் அவர்களின் இசைக் கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசித்துள்ள இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தள வாத்தியக் கலைஞராக வானொலியில் வாசித்து வந்துள்ளார். 1984 - 1990வரை சங்கீத ஆசிரியராக நுவரெலியாவில் நியமனம் பெற்ற இவர் 1990 - 2002வரை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் 2003 - 2066வரை தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபை இசைக் கல்லூரியில் அதிபராகவும் மிருதங்க ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் ஆற்றிய சேவைக்காக வட இலங்கை சங்கீத சபையினால் மிருதங்க கலா வித்தகர், சங்கீத கலா வித்தகர் ஆகிய பட்டங்களும், 1982இல் இராமநாதன் அக்கடமியால் இசைக் கலாமணி பட்டமும், முள்ளியவளை சாயி ஆச்சிரமத்தினால் மிருதங்க லயஞான வித்தகர் என்ற பட்டமும், 2004இல் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் கலைச்சுடர் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 106-107