"ஆளுமை:விக்னேஸ்வரன், பஞ்சாபிகேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விக்னேஸ்வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

10:14, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் விக்னேஸ்வரன்
தந்தை பஞ்சாபிகேசன்
பிறப்பு 1954.12.12
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விக்னேஸ்வரன், பஞ்சாபிகேசன் (1954.12.12 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பஞ்சாபிகேசன். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஜி. சீ. ஈ. வரை கற்று பின் நாதஸ்வர கலையை தனது தகப்பனாரிடமும், எம். பி. பாலகிருஷ்ணனிடமும் கற்றுள்ளார்.

இவர் ஈழத்தின் பிரசித்திப் பெற்ற ஆலயங்களான நல்லூர், திருக்கேதீஸ்வரம், துர்க்கையம்மன், கோணேஸ்வரம், அளவெட்டி, கும்பிளாவழைப் பிள்ளையார் போன்ற ஆலயங்களிலும் கொழும்பு வானொலி நிகழ்ச்சிகளிலும் திருமண விழாக்களிலும் சுவிஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், நோர்வே, பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற இடங்களிலும் தனது கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

இவரது திறமைக்காக நெதர்லாந்தில் நாதஸ்வரக் கலாமணி என்ற பட்டத்தையும் சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் விருதுகளையும், தங்கப்பதக்கங்களையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 92-93