"ஆளுமை:பித்தன் ஷா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:மீராஷா, கே. எம். பக்கத்தை ஆளுமை:பித்தன் ஷா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:06, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பித்தன் ஷா |
பிறப்பு | 1921.07.31 |
இறப்பு | 1994.12.15 |
ஊர் | கள்ளியங்காடு, மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பித்தன் ஷா (1921.07.31 - 1994.12.15) மட்டக்களப்பு, கள்ளியங்காட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் கலந்தர் லெப்பை மீராஷா. தனது பதினெட்டாவது வயதில் தென்னிந்தியா சென்று ஸ்டார் பிரஸ் எனும் அச்சகத்தில் காரியாலய ஊழியராக பணியாற்றினார். இக்காலத்தைல் புதுமைப்பித்தனுடன் ஏற்பட்ட தொடர்புகளால் அவரது எழுத்துக்களால் கவரப்பட்டு அவரைப்போல் எழுத ஆரம்பித்தார். இத்தன்னையினால் தனது பெயரை பித்தன் ஷா என மாற்றிக்கொண்டார். இந்திய இராணுவத்தில் சில காலம் இணைந்து பணியாற்றிய பின் 1944இல் இலங்கை திரும்பினார்.
1949இல் செல்லையா இராஜதுரை, எம். எஸ். ஏ. அசீஸ் ஆகியோருடன் இணைந்து 'லங்கா முரசு' எனு சஞ்சிகையினை வெளியிட்டார். ஆறு இதழ்கள் வரை வெளியான அப்பத்திரிகையில் தான் இவருடைய முதல் சிறுகதையான இருள் என்ற முதலாவது சிறுகதை வெளியானது. இவரது காத்திரமான இலக்கியப் படைப்புகளில் பாதிக் குழந்தை, தாம்பத்தியம் ஆகியவை தேசிய ரீதியில் பாரட்டுப் பெற்றவை. இவை தவிர மனச்சாந்தி, தனிமை, இருட்டு, நத்தார் பண்டிகை, வேதவாக்கு, ஊதுகுழல், முதலிரவு, முள்ளும் மலரும், ஊர்வலம், தாகம், விடிந்ததும் விடியாததும், ஒரு நாள் பொழுது, அறுந்த கயிறு, திருவிழா, சாந்தி ஆகிய சிறுகதைகளையும் இவர் படைத்துள்ளார். இவரது சிறுகதைப் படைப்புக்கள் 1995அம் ஆண்டு மல்லிகைப்பந்தல் வெளியீடாக 'பித்தன் கதைகள்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்பு
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 79-82