"ஆளுமை:ராஜஸ்ரீகாந்தன், ராஜரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 20: | வரிசை 20: | ||
==வெளி இணைப்பு== | ==வெளி இணைப்பு== | ||
− | [http://varmah.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ராஜசீறீகாந்தன் பற்றி சி.வன்னியகுலம்] | + | *[http://varmah.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D ராஜசீறீகாந்தன் பற்றி சி.வன்னியகுலம்] |
06:00, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ராஜஸ்ரீகாந்தன், ராஜரட்ணம் |
பிறப்பு | 1948.06.30 |
இறப்பு | 2004.04.20 |
ஊர் | வதிரி |
வகை | எழுத்தாளர், ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராஜஸ்ரீகாந்தன்(1948.06.30-2004.04.20) யாழ்ப்பாணம் வதிரியை சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை ராஜரட்ணம். இவர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முன்னணி உறுப்பினராக விளங்கிய இவர் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியுடனும் மிக நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். இதனால் சோவியத்ரஷ்யாவின் நொவெஸ்தி செய்திச் சேவையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. சோவியத்நாடு மற்றும் ஏனைய சோவியத் வெளியீடுகளுக்கான ஆசிரியர் குழுவில் இணைந்து இவர் பணியாற்றினார். இவர் 1997ஆம் ஆண்டு ய்ஹொடக்கம் 2002வரை தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கிய மேதையான அழகு சுப்பிரமணியத்தை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு அவர் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளை தமிழாக்கம் செய்து நீதிபதியின் மகன் என்ற தலைப்பில் புத்தகமாக்கி வெளியிட்டார். அப்பணிக்கென சாகித்திய மண்டலப் பரிசையும் வென்றெடுத்தார். 1994ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரின் கால சாளரம் எனும் சிறுகதை தொகுப்பு நூலும் இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 10-12