"ஆளுமை:தங்கம்மா, அப்பாக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தங்கம்மா அப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தங்கம்மா அப்பாக்குட்டி (பி. 1925. ஜனவரி 07) ஓர் எழுத்தாளராவார். இவர் சென்னை சைவசித்தாந்த சங்கம் நடத்திய சைவப் புலவர் தேர்வில் சித்தியடைந்து 1958 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பெண் சைவப்புலவரானார். அதுமட்டுமல்லாது இவர் காரை நகர் ஈழத்து சிதம்பர ஆலயத்தினரால் 'சிவத்தமிழ்ச் செல்வி' எனப் பட்டம் வழங்கிக் கௌரவிக்ப்பட்டார்.
+
தங்கம்மா அப்பாக்குட்டி (பி. 1925. ஜனவரி 07) ஓர் எழுத்தாளராவார். இவரது தந்தை அப்பாக்குட்டி; தாய் தையற்பிள்ளை. அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.
  
 +
"பண்டிதை" என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் தொடங்கினார். தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார். தெல்லிப்பழையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயில் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் 1977ம் ஆண்டு ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டதோடு சித்திரத் தேரும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. அவை மட்டுமன்றி மண்டபங்களும், அறச்சாலைகளும், நந்தவனமும், தீர்த்தத் தடாகமும் என சிறந்த அமைப்புக்களோடு ஆலயத்தை ஒரு சமூகப்பணியின் நிறுவனமாகவும் உருவாக்கினார். இவ்வாறு பல சமய சமூகப் பணிகளைச் செய்துள்ளார்.
 +
 +
பெண்மைக்கு இணையுண்டோ?, வாழும் வழி  ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளதோடு செஞ்சொற் செம்மணி , சிவத்தமிழ் செல்வி, சைவ தரிசினி, திருவாசகக் கொண்டல், திருமுறைச் செல்வி, சிவமயச் செல்வி, சிவஞான வித்தகர், துர்க்கா துரந்தரி, செஞ்சொற்கொண்டல், திருமொழி அரசி, தெய்வத் திருமகள் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|523}}
 
{{வளம்|4428|523}}
 +
{{வளம்|1950|01-08}}
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF விக்கிப்பீடியாவில் தங்கம்மா அப்பாக்குட்டி]
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95 தங்கம்மா அப்பாக்குட்டி]
+
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95 தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி சி. சுதர்சன்]

22:47, 11 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தங்கம்மா அப்பாக்குட்டி
தந்தை அப்பாக்குட்டி
தாய் தையற்பிள்ளை
பிறப்பு 1925.01.07
இறப்பு 2008.06.15
ஊர் தெல்லிப்பழை
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கம்மா அப்பாக்குட்டி (பி. 1925. ஜனவரி 07) ஓர் எழுத்தாளராவார். இவரது தந்தை அப்பாக்குட்டி; தாய் தையற்பிள்ளை. அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1946 மட்டக்களப்பு சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.

"பண்டிதை" என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 1950-60களில் இலங்கை வானொலியின் மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் தொடங்கினார். தமிழ் நாடு சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார். தெல்லிப்பழையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயில் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் 1977ம் ஆண்டு ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டதோடு சித்திரத் தேரும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. அவை மட்டுமன்றி மண்டபங்களும், அறச்சாலைகளும், நந்தவனமும், தீர்த்தத் தடாகமும் என சிறந்த அமைப்புக்களோடு ஆலயத்தை ஒரு சமூகப்பணியின் நிறுவனமாகவும் உருவாக்கினார். இவ்வாறு பல சமய சமூகப் பணிகளைச் செய்துள்ளார்.

பெண்மைக்கு இணையுண்டோ?, வாழும் வழி ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளதோடு செஞ்சொற் செம்மணி , சிவத்தமிழ் செல்வி, சைவ தரிசினி, திருவாசகக் கொண்டல், திருமுறைச் செல்வி, சிவமயச் செல்வி, சிவஞான வித்தகர், துர்க்கா துரந்தரி, செஞ்சொற்கொண்டல், திருமொழி அரசி, தெய்வத் திருமகள் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 523
  • நூலக எண்: 1950 பக்கங்கள் 01-08

வெளி இணைப்புக்கள்