"ஆளுமை:மகேந்திரன், இரத்தினசபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Gopi, ஆளுமை:மகேந்திரன், இ. பக்கத்தை ஆளுமை:மகேந்திரன், இரத்தினசபாபதி என்ற தலைப்புக்கு வழிமாற்ற...)
(வேறுபாடு ஏதுமில்லை)

09:09, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மகேந்திரன், இ.
பிறப்பு 1954.08.27
ஊர் கோப்பாய் தெற்கு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முல்லை அமுதன் என அறியப்படும் மகேந்திரன், இரத்தினசபாபதி (1954.08.27 - ) கோப்பாய் தெற்கு கல்வியங்காட்டைச் சேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர். இவரது தந்தை இரத்தினசபாபதி, தாய் வேதவல்லி. திருகோணமலை மெதடிஸ்ற் தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 1997 இல் இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்கிறார்.

முல்லை அமுதன் என்னும் புனைப்பெயரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். நித்திய கல்யாணி (1981), புதிய அடிமைகள் (1983), விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984), யுத்தகாண்டம் (1989), விழுதுகள் மண்ணைத் தொடும் (1993), ஆத்மா (1994), விமோசனம் நாளை (1995), ஸ்நேகம் (1998), பட்டங்கள் சுமக்கிறான் (1999), முடிந்த கதை தொடர்வதில்லை (1999), யாகம் (2000), இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002) போன்றவை இவரது நூல்கள்.

காற்றுவெளி எனும் இதழினையும் நடத்திவரும் இவர் பல்லாயிரக்கணக்கான நூல்கள், இதழ்களைச் சேகரித்துள்ளார். அவற்றை ஆவணப்படுத்துவதோடு கண்காட்சிகளையும் நடத்தி வருகிறார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 148-154


வெளி இணைப்புக்கள்