"ஆளுமை:திருநாவுக்கரசு, முத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:51, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு, முத்து
தந்தை முத்து
பிறப்பு 1943.10.30
இறப்பு 1990
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு. திருநாவுக்கரசு (1943.10.30 - 1990) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்து. சிறுவயது முதலே இசை, நாடகம், புராண, சரித்திர வசன நாடகம், பாடுதல் ஆர்மோனியம் இசைத்தல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டு செயற்பட்ட இவர் நாடகக் கலாநிதி நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்களிடம் ஆர்மோனிய கலையை கற்றுத் தேர்ந்தவராவார். மேலும் அரியாலையின் புகழ்பூத்த சங்கீத இசைநாடக சிரோன்மணி சபாபதிப்பிள்ளையிடம் சங்கீத நுணுக்கங்களை சிறுவயதில் பெற்றார்.

இவர் நடித்த அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, வேடன் கண்ணப்பன் ஆகிய நாடகங்கள் பலமுறை மேடையேற்றப்பட்டவை ஆகும். தனது குருவான நாடகக் கலாநிதி. நடிகமணி வி.வி.வைரமுத்துவின் இசை நாடகங்களுக்குப் பின்னணி இசைக் கலைஞராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

ஆர்மோனியச் சக்ரவர்த்தி எனப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் 1963ஆம் ஆண்டில் அரியாலை ஶ்ரீ சரஸ்வதி அம்பாள் ஆலய முன்றலில் இடம் பெற்ற இசை விழா நிகழ்ச்சியின் போது ஆசிரியப் பெருந்தகை வித்துவான் அமரர் வட அல்லவை முருகேசு அவர்களால் பொற்கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 165