"ஆளுமை:சிவஞானசுந்தரம், சிற்றம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி.சிவஞானசுந்தரம் அவர்கள் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த ஓர் ஓவியர், பத்திரிகையாளர், பதிப்பாளர். சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய இவர் பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துள்ளது.
+
சி. சிவஞானசுந்தரம் (1924-1996) யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த ஓர் ஓவியர், பத்திரிகையாளர், பதிப்பாளர். சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய இவர் பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துள்ளது.
  
முதன்முதலில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல சிரமங்களுக்கு இடையில் 1964 இல் சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பதிப்பித்தார். மற்றும் சுந்தர் என்ற புனை பெயரைக் கொண்டு இவர் ''சிரித்திரன் சித்திரக் கொத்து'' என்ற நூலையும், ''கார்ட்டூன் உலகில் நான்'' என்ற வரலாற்று நூலையும் எழுதியிருக்கின்றார்.  
 
06:54, 28 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவஞானசுந்தரம், சி.
பிறப்பு 03.03.1924
இறப்பு 03.03.1996
ஊர் கரவெட்டி
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. சிவஞானசுந்தரம் (1924-1996) யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த ஓர் ஓவியர், பத்திரிகையாளர், பதிப்பாளர். சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய இவர் பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

முதன்முதலில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல சிரமங்களுக்கு இடையில் 1964 இல் சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். ஏழு ஆண்டுகள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பதிப்பித்தார். மற்றும் சுந்தர் என்ற புனை பெயரைக் கொண்டு இவர் சிரித்திரன் சித்திரக் கொத்து என்ற நூலையும், கார்ட்டூன் உலகில் நான் என்ற வரலாற்று நூலையும் எழுதியிருக்கின்றார்.

1987 ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையினருடன் நிகழ்ந்த போரின் போது இடம்பெற்ற சம்பவங்களில் சிரித்திரன் அச்சகத்தின் சொத்துகள், அச்சகப் பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. இந்நிகழ்வுடன் அவரைப் பாரிசவாத நோய் பற்றிக் கொண்டது. வலது கரம் இயங்க மறுத்த நிலையில் இடது கரத்தால் எழுதி மீண்டும் சிரித்திரன் இதழை வெளியிட்டு வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் இவருக்கு மாமனிதர் விருது வழங்கிப் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 24-26

வெளி இணைப்புக்கள்