"ஆளுமை:றிச்சாட் அருளையா, கார்த்திகேசு (கல்லூர் பித்தன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=றிச்சாட் அர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

06:24, 18 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் றிச்சாட் அருளையா, கார்த்திகேசு (கல்லூர் பித்தன்)
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1916.07.21
இறப்பு 1995.01.25
ஊர் கல்முனை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு றிச்சாட் அருளையா (கல்லூர் பித்தன்) கிழக்கிலங்கையின் கல்முனையில் கார்த்திகேசு உபதேசியார், சோதிமுத்து தம்பதியரின் மகனாக 1916 ஜூலை, 21ம் திகதி பிறந்தார்.

முதலைக்குடா மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரியிலும், மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை பெற்றுக்கொண்டார்.

கல்முனை லீஸ் உயர்தர பாடசாலையிலும், கல்முனை பாத்திமா கல்லூரியிலும், பெரிய கல்லாறு மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராக பணியாற்றிய இவர் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றினார்.

இவர் கல்முனை தமிழ் இலக்கிய கழக காப்பாளராகவும், கல்முனை மாவட்ட ஆசிரிய சங்க தலைவராகவும், கல்முனை பொதி நல சேவைச் சங்கத் தலைவராகவும் இருந்து பணி செய்துள்ளார். இவர் 1995 ஜனவரி, 25ம் திகதி காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 125