"ஆளுமை:அருணாசலம், ச." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=அருணாசலம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ச.அருணாசலம் அவர்கள் 31.10. | + | ச.அருணாசலம் அவர்கள் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட ஓர் கல்வியியலாளர், ஆசிரியர். இவர் 31.10.1864இல் பிறந்தார். ஆறுமுகநாவலரின் மறைவின் பின் நாவலரின் பணியை தொடரப் புறப்பட்ட ஒளியே திரு. ச. அருணாசலம். இவர் தனது ஆரம்பக் கல்வியை களபூமி கிறிஸ்தவ பாடசாலையில் கற்றார். |
5ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற அருணாசலம் தாமொரு பயிற்றப்பட்ட ஆசிரியராய் வரவேண்டும் என்ற ஆர்வத்தினால் தெல்லிப்பளையில் அமெரிக்க மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட ஆசிரியப் பயிற்சிப் பாடசாலையில் பிரவேச வகுப்பில் சேர்ந்து கற்று சித்திபெற்றார். | 5ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற அருணாசலம் தாமொரு பயிற்றப்பட்ட ஆசிரியராய் வரவேண்டும் என்ற ஆர்வத்தினால் தெல்லிப்பளையில் அமெரிக்க மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட ஆசிரியப் பயிற்சிப் பாடசாலையில் பிரவேச வகுப்பில் சேர்ந்து கற்று சித்திபெற்றார். |
21:27, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அருணாசலம், ச. |
பிறப்பு | 1864.10.31 |
ஊர் | காரைநகர் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ச.அருணாசலம் அவர்கள் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட ஓர் கல்வியியலாளர், ஆசிரியர். இவர் 31.10.1864இல் பிறந்தார். ஆறுமுகநாவலரின் மறைவின் பின் நாவலரின் பணியை தொடரப் புறப்பட்ட ஒளியே திரு. ச. அருணாசலம். இவர் தனது ஆரம்பக் கல்வியை களபூமி கிறிஸ்தவ பாடசாலையில் கற்றார்.
5ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற அருணாசலம் தாமொரு பயிற்றப்பட்ட ஆசிரியராய் வரவேண்டும் என்ற ஆர்வத்தினால் தெல்லிப்பளையில் அமெரிக்க மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட ஆசிரியப் பயிற்சிப் பாடசாலையில் பிரவேச வகுப்பில் சேர்ந்து கற்று சித்திபெற்றார்.
யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் எவ்வாறு சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க போரிட்டாரோ அதே போல காரைநகரில் சைவத்தையும் தமிழையும் பாதுகாத்தவர் திரு அருணாசலம் அவர்களே. இவரின் முயற்சியினாலேயே சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவில் பாடசாலை என்பன ஆரம்பிக்கப்பட்டன.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 274-280