"ஆளுமை:கணேச சிவபாலக் குருக்கள், சின்னத்துரை ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணேச சிவபால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:55, 25 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணேச சிவபாலக் குருக்கள்
தந்தை சின்னத்துறை ஐயர்
தாய் செல்லம்மா
பிறப்பு 1948
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ கணேச சிவபாலக் குருக்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமயப் பெரியார். இவர் புங்குடுதீவு கணேச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், புங்குடுதீவு வேதாகம பாடசாலை, சுன்னாகம் சிவானந்த குருக்கலம் என்பவற்றில் சமயக் கல்வியையும் கற்றார்.

ஆரம்பத்தில் புங்குடுதீவு தல்லைப்பற்று முருகமூர்த்தி ஆலயத்திலும், நாரந்தனை கந்த சுவாமி கோவிலிலும், 1991ஆம் ஆண்டு கொம்பனித் தெரு சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பிரதம குருவாக பணியாற்றினார்.

சமயப்பணியுடன் சமூகப்பணி செய்தமைக்காக இவருக்கு சமாதான நீதவான் பதவியும் கிடைத்தது. இந்து குருபீடம் இவருக்கு சிவாகம கிரியா பூஷணம் என்ற பட்டத்தை வழங்கியதோடு யாழ்ப்பாணம் வித்துவசபையால் சிறந்த சமயச் சொற்பொழிவாளர் என்று பாராட்டப்பட்டார். ஜப்பான் நிறுவனம் ஒன்று இவருக்கு அண்மையில் கலாநிதிப்பட்டத்தை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 135