"ஆளுமை:விஜயரட்ணம், வைத்தியலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

02:32, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் விஜயரட்ணம், வைத்தியலிங்கம்
தந்தை வைத்தியலிங்கம்
தாய் கதிராசிப்பிள்ளை
பிறப்பு
ஊர் வேலணை
வகை அரசியல் தலைவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெரியவர் என்று பலராலும் அறியப்படும் வைத்தியலிங்கம் விஜயரட்ணம் அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கில கல்வியை கற்று லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சையில் விஷேட சித்தியும் பெற்றார். ஆனால் இளம் வயதில் தனது தந்தையாரை இழந்த காரணத்தினால் இவரால் உயர் கல்விக்கு செல்ல முடியவில்லை. இதனால் தொழில் வாய்ப்பு அதிகம் இருந்த கோலாம்பூர் சென்று தொழில்நுட்ப உதவியாளனாக இருந்த இவர் தனது புத்திக் கூர்மையினாலும், தொழில் திறமையினாலும் Clerk of Works, F.M.S.Railways பதவிநிலைகளை எட்டினார்.

யாழ்ப்பாண தீவுப் பகுதியை சேர்ந்த பலருக்கு மலாயாவிலும், சிங்கப்பூரிலும் தொழில் வாய்ப்புக்களை அளித்ததோடு மலாயாவில் விவேகானந்தா சபையை தாபித்து அதற்கு தலமை வகித்து திறம்பட நடாத்தினார்.

பிறந்த மண்ணில் அக்கறை கொண்ட இவர் தனது சொந்த காணியையே கொடுத்து வேலணை சரஸ்வதி வித்தியாசாலையை 1927இல் நிறுவினார். 1931ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின்கீழ் உருவாகிய உள்ளூராட்சி அமைப்புக்களில் வேலணை, சரவணை, நாரந்தணை, கரம்பொன் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வேலணை கிராமச் சங்கம் அமைக்கப்பட்டபோது இதன் தலைவராக தொடர்ந்து இரு தடவைக்கு மேல் இருந்து சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 507-509