"ஆளுமை:பசுபதிப்பிள்ளை, நா. க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(" {{ஆளுமை| பெயர்=பசுபதிப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:06, 11 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | பசுபதிப்பிள்ளை, நா. க. |
| பிறப்பு | 1902 |
| ஊர் | வேலணை |
| வகை | தொழிலதிபர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
இராசையர் என பலராலும் அறியப்படும் பசுபதிப்பிள்ளை வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது சிறிய தந்தையாரான நா.சுப்பிரமணியம் அவரின் வழிகாட்டலில் டிக்கோயா சென்று தனது விடாமுயற்சியினாலும், விவேகத்தாலும் ஹற்றன் நகரில் ஒரு கடையும், டிக்கோயாவில் மூன்று கடைகளையும் வாங்கி நடத்தினார். தனது தம்பிமார் இருவரையும் நா.க பிரமநாயகம்பிள்ளை, ந.க.பரமசிங்கம்பிள்ளை இவர்களையுமழைத்துச் சென்று முதலாளிமார் ஆக்கினார். ஹற்றன், டிக்கோயா வாழ் மக்கள் இவர்களை N.K.P.சகோதரர்கள் என்றே அழைத்தனர். அதுமட்டுமல்லாது வயல், நிலம் தோட்டங்களிலும் உறவினர்களை வேலைக்கு வைத்து வேலாண்மை செய்திருந்தார். அக்காலத்தில் கல்வீடுகள் மிக மிக குறைவாகவே காணப்பட்டது. ஆதலால் இவரை கல்வீட்டு இராசையர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டார். பொது வாழ்விலும் நிறைய ஈடுபாடு கொண்டவராக காணப்பட்டார்,
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 433-434