"ஆளுமை:சீவரெத்தினம் உபாத்தியார், சுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சீவரெத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:44, 6 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சீவரெத்தினம் உபாத்தியார்
தந்தை சிதம்பரம்
தாய் சிவகொழுந்து அம்மையார்
பிறப்பு 1918.09.05
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீவரெத்தினம் உபாத்தியார் வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவ சங்கத்தினரால் தீவக ரத்தினம் என அழைக்கப்பட்டார். இவர் ஆசிரியப் சேவையை ஏற்று முதன் முதலாக புங்குடுதீவு கணேஷ வித்தியாசாலையில் தனது பணியினை தொடங்கினார். அடுத்து நாரந்தனை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை, எனப் பணியாற்றி ஈற்றில் தன் சொந்த ஊராகிய சரஸ்வதி வித்தியாசாலையில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையற்றினார். அதுமட்டுமல்லாமல் சமூகத் தொண்டராகவும், கிராம சபை உறுப்பினராகவும், வேலணை பல நோக்கு கூட்டுறவு சங்க நெறியாளருள் ஒருவராகவும் பணியாற்றினார். கொடிய யுத்தம் நடந்த வேலையில் ஈற்றில் தன் தாய் மண்ணை விட்டு கண்ணீருடன் கனடாவுக்கு சென்றார். இவர் அங்கும் வடகிப்ளிங் என்ற இடத்தில் இலங்கைத் தமிழர் முதியோர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாகவுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 333-335