"ஆளுமை:குமரகுரு, நாகலிங்கம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=குமரகுரு, எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:16, 24 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | குமரகுரு, என். |
தந்தை | நாகலிங்கம்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | அளவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தவில் மேதை என்று புகழப்படும் என். குமரகுரு என்பவர் தமது தந்தை யார் நாகலிங்கம்பிள்ளை என்பவரிடமே இளமையிற் தவிற்கலைப் பயிற்சி பெற்றார். தந்தையிடம் முகந்து கொள்ளக்கூடிய கலைஞானத்தைப் பெற்றுக் கொண்டபின் பிரபல தவில் மேதையாக விளங்கிய வலங்கை மான் சண்முகசுந்தரம் பிள்ளையின் தந்தை யாராகிய மூளாய் ஆறுமுகம் பிள்ளையிடந் தவிற்பயிற்சி பெற்றார். பிரபல நாதஸ்வர வித்துவான்களை அளவெட்டி என். கே. பத்மநாதன், திரு. மெஞ்ஞானம், பல்லவி T. B. நடராஜ சுந்தரம்பிள்ளை, பந்தனை நல்லூர் தட்சணாமுர்த்திப் பிள்ளை ஆகிய பெரும் கலைஞர்களுடன் எல்லாம் இணைந்து தவில் வாசித்திருக்கின்றார். இவர் தவில் மட்டுமல்ல வயலின், செஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதிலும் வல்லவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 573-574