"பேச்சு:மலையகத் தொழிற்சங்க வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("== நூல்விபரம்== இந்நூல் மல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:06, 6 மே 2015 இல் நிலவும் திருத்தம்
நூல்விபரம்
இந்நூல் மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் வீரகேசரி வார வெளியீட்டில் 2003இல் இடம்பெற்ற கட்டுரையின் விரிவாக்கமாகும். இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் போராளியாகத் திகழ்ந்தவரும், இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான திருமதி விவியன் குணவர்த்தனாவிற்குக் காணிக்கையாக இச்சிறுநூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மலையக வரலாற்றில் கோ.நடேசையர், டாக்டர் மணிவால் போன்றோரின் வருகை, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உதயம், அரசாங்க சபைத் தேர்தல், முல்லோயா போராட்டம், இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடிச் சங்கம் போன்றவற்றின் உதயமும் செயற்பாடும் என்பன சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. விரிவான வரலாறொன்றினை எழுதப்புகும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் உதவக்கூடும்.
பதிப்பு விபரம்
மலையகத் தொழிற்சங்க வரலாறு. அந்தனி ஜீவா. கண்டி: மலையக வெளியீட்டகம், த.பெ.எண் 32, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (அக்குறணை: வர்தா பதிப்பகம்).
24 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5 * 14.5, ISBN: 955-9084-22-4.