பகுப்பு:தூது (யாழ்ப்பாணம்)
நூலகம் இல் இருந்து
தூது இதழானது யாழ், கிறிஸ்தவ மறை மாவட்டத்தினால் வெளியிடப்பட்ட காலாண்டு சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக லோறன்ஸ் கொலிந்திரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்காலகட்டத்தில் உண்டான போர்ச்சூழலாலும், தரமற்ற தொடர்புச் சாதனங்களின் ஊடுருவலாலும் பாதிக்கப்பட்டு திறமைகளை வெளிக்காட்ட முடியாது இருந்தவர்களினை இனங்கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களானது சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான கலை, கலாசார பண்பாட்டு அம்சங்களை வெளிக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளன.
"தூது (யாழ்ப்பாணம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.