நிறுவனம்:யாழ்/ பன்னாலை சிறி கனகசபை வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ பன்னாலை சிறி கனகசபை வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் பன்னாலை
முகவரி பன்னாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1855ஆம் ஆண்டளவில் இப் பாடசாலையானது விழிசிட்டி ஆண்கள் தமிழ் பாடசாலை என்ற பெயரில் அம்பலவாண உபாத்தியார் என்பவரால் யாழ்ப்பாணமாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த விழிசிட்டி என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இப் பாடசாலை நிறுவுனரின் மறைவிற்குப்பின் உடமையாளர்களின் ஒப்புதலுடன் சங்கரநாதர் கனகசபைப்பிள்ளை அவர்களால் தற்போது அமைந்துள்ள இடமான பன்னாலைக்கு மாற்றப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது.

1869ஆம் ஆண்டில் இப் பாடசாலை பதிவு செய்யப்பட்டது. இதனால் தெல்லிப்பழையில் முதன் முதலில் பதிவுசெய்யப்பட்ட சைவப்பாடசாலையாக இது திகழ்ந்தது. 1920ஆம் ஆண்டு பண்டிதர் சி.கதிரிப்பிள்ளை அவர்களால் நடாத்தப்பட்டுவந்த பாடசாலையை இப் பாடசாலையுடன் இணைத்து விழிசிட்டி தவியார் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. 1924ஆம் ஆண்டு வரை 5ஆம் வகுப்பு வரை கொண்டிருந்த இப் பாடசாலை படிப்படியாக உயர்ந்து 1930ஆம் ஆண்டு இப் பாடசாலையில் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்புவரை நடாத்தப்பட்டது. அத்தோடு 1937ஆம் ஆண்டு கோப்பாய்த் தொகுதி முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கம் அவர்களால் இப்பாடசாலைக்கான பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. தெல்லிப்பளைப்பகுதியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கம் இதுவே.

அம்பலவாணர் கனகசபை அவர்களின் நினைவாக 15.01.1947ஆம் ஆண்டு இப் பாடசாலைக்கு சேர் கனகசபை வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. பின்னர் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்கும் திட்டம் வெளியிட்ட போது இப் பாடசாலை முகாமையாளர் 1.11.1960 முதல் அரசாங்கத்திடம் தாமகவே முன் வந்து பாடசாலையை அரசிடம் ஒப்படைத்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 30-33