நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி
பெயர் | யாழ்/ தெல்லிப்பளை தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | தெல்லிப்பளை |
முகவரி | தெல்லிப்பளை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளியானது யாழ் மவட்டத்திலுள்ள காங்கேசன்துறைத் தொகுதியில் தெல்லிப்பளை எனும் கிராமத்தின் மத்தியலமைந்து காணப்படும் பெரிய சந்திக்கு அருகாமையிலுள்ள யூனியன் கல்லூரிக்கு வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது. இது பாலர் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஓர் ஆரம்ப பாடசாலையாகும்.
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புக்கள் விலக்கப்பட்டு 01-01-1979இல் அமெரிக்க மிஷன் காலத்தில் தொழிற்கூடமாகவிருந்த கட்டிடத்தில் புதிதக இப் பாடசாலை ஆரம்பித்தது. 08.01.1979இல் முதன் முதலாக படசாலை அரம்பமான அன்று அதிபராக க.சிவநேசன் நியமிக்கப்பட்டார். இப் பாடசாலைக்கு யாழ்/ யூனியன் கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயர் வட்டாரக் கல்வி அதிகாரி பொ.சிவஞானசுந்தரம் அவர்களால் சூட்டப்பட்டது.
முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், இத் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ. அமிர்தலிங்கம் அவர்கள் தமிழினத்திற்காக தம்மை அர்ப்பணித்தவரும், இத் தொகுதிக்குரியவரும், இப் பாடசாலை அமைந்திருக்கும் இடத்திற்கு சொந்தக்காரருமான தந்தை செல்வா அவர்களின் பெயரை இப் பாடசாலைக்கு யா/ தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி என சூட்டினார்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 125-127