நிறுவனம்:திரு/ புனித மரியாள் பேராலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புனித மரியாள் பேராலயம்
வகை கிறிஸ்தவ ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி புனித மரியாள் பேராலயம், திருகோணமலை
தொலைபேசி 0263261770
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இந்தப் பேராலயம் 1893 ஆம் ஆண்டு திருகோணமலையில் நிறுவப்பட்ட தேவாலயமாகும். திருவிழாக்கள் இன்றைய காலத்தில் நடைபெறுவது போன்று ஆடம்பரமாக முன்னரும் நடைபெற்றுள்ளது. அக்காலத்தில் திருப்பலி இன்றைய காலத்தைப் போல் அல்லாமல் இலத்தீன் மொழியிலேயே திருப்பலி நடைபெற்றது.

எமது புனித மரியாள் பேராலயம் அக்காலத்தில் முன்பகுதியில் இருபக்கமும் இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. (இதனை டோம என்று கூறுவர்) அக்கோபுரத்தினுள் தான் கோவில் மணியும் இருந்தது. அது கட்டப்பட்டு நீண்டகாலம். 1893ஆம் ஆண்டில் அருட்தந்தை சி. பூரி அ.ம.தி. அடிகளாரால் கட்டப்பட்டது. அது அதிகமாக சேதமடைந்ததற்கு மணி ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்பட்டது காரணமாக இருக்கலாம். அதனால் அதனை அகற்ற வேண்டிய தேவை இருந்ததினால் அருட்பணி ராகல் அடிகளாரின் காலத்தில் அந்தக் கோபுரம் இடிக்கப்பட்டது.

அதற்கு முன் ஆலயத்தின் மேலுள்ள மாதாவின் சொரூபத்தை கிரெயின் இயந்திரம் தருவிக்கப்பட்டு உயரத்தில் இருந்த சொரூபம் இறக்கப்பட்ட காட்சியைக் கண்டுகளிக்க நுற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். அதனைத் தொடர்ந்து கோபுரம் உடைக்கப்பட்ட காட்சியைக் கண்டு கலங்கிப் போனோர் அனேகர். இன்று மாதா சொரூபம் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

1978இல் இடம்பெற்ற கடும் புயலிலோ, 2004இல் இடம் பெற்ற சுனாமியினாலோ இவ் ஆலயத்திற்கு எந்த அனர்த்தமும் இடம்பெறவில்லை. ஆரம்ப காலத்தில் ஆலயத்தின் நடுப்பகுதி 1935ஆம் ஆண்டு மார்கழி மாதம் நத்தார் தினத்தின் பின்னர் பேராலயத்தின் கூரை உடைந்து வீழ்ந்ததாக ஒரு தகவல். அதுபற்றி சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.

தூய மரியாள் பேராலய வளவில் அந்நாட்களில் இரண்டு பாடசாலைகள் இயங்கி வந்தன. புனித வளனார் தமிழ் வித்தியாலயம், சேன்ட் யோசப் கல்லூரி பின்னர் சேன்ட் யோசப் கல்லூரி தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

பங்கிலிருந்து உருவாகிய குருக்கள், துறவிகள் விபரங்கள் கீழ்வருமாறு:-

குருக்கள்

பேரருட்திரு நோயல் இம்மானுவேல், மறைமாவட்ட ஆயர், அருட்பணியாளர் . P. சைமன் அருளப்பா, அருட்பணியாளர G. E. L. வம்பேக், அருட்பணியாளர தரங்க சஞ்ஜீவ் சாமிநாதன், SJ

துறவியர்

அருட்சகோதரி மேரி சிந்தியா, அருட்சகோதரி மேரி லூக், அருட்சகோதரி மாரி கொன்ஸ்டன்ஸ், அருட்சகோதரி மேரி பிரதீபா, அருட்சகோதரி மேரி தர்ஸினி, அருட்சகோதரி பிரகாஸினி, அருட்சகோதரி மேரி தனுஷியா

பங்கை வழிநடத்திய ஆயர்கள்

பேரருட்திரு வன்றீத் ஆண்டகை, பேரருட்திரு சாள்ஸ் லவீஞ் ஆண்டகை, பேரருட்திரு கஸ்டன் றொபிஷே ஆண்டகை, பேரருட்திரு இக்னேஷியஸ் கிளென்னி ஆண்டகை, பேரருட்திரு B. தியோகுப்பிள்ளை ஆண்டகை (துணை ஆயர்), பேரருட்திரு L. R. அன்ரனி ஆண்டகை (லியோ இராஜேந்திரம்), பேரருட்திரு J. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, பேரருட்திரு C. நோயல் இம்மானுவேல் ஆண்டகை

பங்கில் பணியாற்றிய பங்குத் தந்தையர்கள்

அருட்பணியாளர் ஹென்றி பூரி (இ.ச), அருட்பணியாளர் சாந்தஸ், அருட்பணியாளர் ஒலிவர் (இ.ச.), அருட்பணியாளர் ஹெயிம் பேக்கர் (இச), அருட்பணியாளர் டுப்போன் (இச), அருட்பணியாளர் வென்டன் புஷ் (இ.ச.), அருட்பணியாளர் அலோசியஸ் மேரி (இ.ச.), அருட்பணியாளர் . அலெக்சாண்டர், அருட்பணியாளர் ஜெரோம் டிசா (மறைமாவட்டக் குரு - இந்தியா), அருட்பணியாளர் டெரன்ஸ் ஆரன்ஸ் (இ.ச.), அருட்பணியாளர் ஹென்றி பொன்னையா (மறைவமாட்டக் குரு), அருட்பணியாளர் றிப்சட் பீரிஸ் (உதவிப் பங்குத் தந்தை மறைமாவட்டக் குரு), அருட்பணியாளர் V. அன்மனி, அருட்பணியாளர் அன்ரனி லியோ (மறைமாவட்டக் குரு), அருட்பணியாளர் இக்னேசியஸ் செபஸ்தியன் (மறைமாவட்டக் குரு), அருட்பணி.P. ஜீவராஜ் (உதவிப் பங்குத் தந்தை - மறைமாவட்டக் குரு), அருட்பணியாளர் G. டொணேசன், அருட்பணியாளர். A. ஜேசுதாசன் (உதவிப் பங்குத் தந்தை - மறைமாவட்டக் குரு), அருட்பணியாளர் V. ஜோர்ஜ் திசாநயக்கா (மறைமாவட்டக்குரு), அருட்பணியாளர், P. ரமேஸ் கிறிஸ்டி, அருட்பணியாளர் T.A. யூலியன்