நிறுவனம்:திரு/ சேனையூர் நாகம்மாள் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரு/ சேனையூர் நாகம்மாள் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சேனையூர்
முகவரி சேனையூர்,மூதூர், திருகோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் கோயில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம், நடமாடும் தெய்வமென அற்புதங்கள் வழங்கி அருள் மழை பொழிபவள் தான் நாகம்மாள். இவ்வாறான புகழுக்கும் போற்றலுக்கும் பெயர்போன ஆலயந்தான் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்குப்பிரதேசத்தில் கட்டைப்பறிச்சான் வடக்குப் பகுதியில் எழில் சூழ விளங்கும் சேனையூர் திருப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருள் பாலிக்கும் அருள் ஶ்ரீ நாகம்மாள் ஆலயமாகும்.

பரந்து நிழல்பரப்பி ஆலயமுன் முகப்பில் விழுதுகள் விட்டு காட்சி தரும் ஆலமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட இவ்வாலயத்தின் சுற்றிவர வெண்மணல்கள் பரவியுள்ளது. பக்கமெல்லாம் குருந்தை, பாளை, நெய்க்கொட்டை, விண்ணங்கு, வேம்பு மரங்கள் நிரல் பரப்பி நிற்கும் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய இடத்தில் அமைந்திருப்பதும். அற்புதக்காட்சியாகும்.இவ் ஆலய அமைப்பைப்பற்றி கும்மிப்பாடலும் பாடப்பட்டது.

பாம்புக்கோயில்களில் பிரசித்தி பெற்றதாக கிழக்கிலங்கையிலே மிகவும் அற்புதமாகப் பேசப்படும் இக்கோயில் வரலாறும் அதன் மகிமை பற்றியும் யாழ்ப்பாணம் சித்தங்கேணி பண்டிதர் த.சுப்பிரமணியம் அவர்களால் நாகதம்பிரான் மான்மியம் என்ற நூலில் எழுதப்பட்டுள்ளதையும், திருகோணமலை பண்டிதர் வடிமேலயய்யா அவர்கள் திருகோணமலை மாவட்ட கோயில் வரலாறுகளில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்டிருப்பதையும் இவ்வாலயத்தின் புகழ்பரவுவதற்கு காரணமாய் அமைந்திருப்பதையும் குறிப்பிடலாம்

ஆகமரீதியான கோயில் அமைப்போ, ஆகம விதியான பூசைகளோ இவ்வாலயத்தில் இல்லை. ஆலய மூலஸ்தானம் சிறிய ஆசி வடிவிலானது இதுவே 100 வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இதன் பின்புறம் ஒரு புற்றும், இதனைச் சுற்றி ஒருவில் வளைவுடனான சுற்று மதிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மதிலுக்குள் அமைந்துள்ள புற்று வாயிலாகவே ஆலயப் பூசகர் நாகம்பாளுக்கு பால் பழக்கரைசல் வைப்பார். இப்பால் பழப்பூசை காண வார ஞாயிறு நாட்களிலும் வருடவைகாசிப் பொங்கல் நாளிலும் முண்டியடிக்கும் பக்தர்கள் அனேகர் அருளுள்ளோம். கண்களுக்கு நாகதெய்வம் அருட்காட்சி கிடைப்பதுண்டு நாக தெய்வத்தைக் கண்டவர்கள் அருட்பேறு பெற்றவர்கள் தான் என்றால் அது மிகையல்ல சேனையூர்ப் பதிக்கே வாருங்கள் -ஶ்ரீ நாகம்மாளைப் போற்றுங்கள் தேனாய் இனிக்கப் பாடுங்கள் தேவி தெரிசனாந் தருவாள் பாருங்கள் கவிக்குயிலன் சேனையூர் ஶ்ரீ நாகம்பாள் மீது பாடிய வரிமூலம் அம்பாளின் தரிசனம் பற்றிய சிறப்பு சொல்லப்பட்டுள்ளதை அறியலாம். இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக நாக சிலையும் எழுந்தருளியாக அன்னை புவனேஸ்வரி ஐந்து தலை நாகம் குடைபிடித்தாற்போல் காட்சிதர அபய வரதம் காட்டி எழுந்தருளியுள்ளாள். இங்கே வரசித்தி விநாயகர், சூரிய நாராயணர், ஆஞ்சநேயர், பைரவ மூர்த்தி ஆகிய தெய்வங்களை வெளிப்புறங்களிலும் ஆலய் உட்பிரவாகத்தில் சக்திவேல், சந்தான கோபால சுவாமியும் உண்டு.

ஆலய அர்ச்சகர் மஞ்சல் நிறத்துணியால் வாய், மூக்கு, காதுகளை, கட்டிக்கொண்டே நாகதேவிக்குரிய பீசை வழிபாடுகளையும் செய்துவருகின்றார். சர்ப்பந் தீண்டியவர்களுக்கும் விசசம்பந்தமான பிணியாளர்களுக்கும் திருமணத்தடை புத்திர பாக்கியமற்றோருக்கும் விசேடமாக தோச பரிகாரங்கள் பூசகரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறவும் நேத்தி வைக்கப்பட்டு அடியார்கள் நிறைவேற்றுவதை நிறையக்காணலாம் இவ்வாலயத்தில் கட்டப்படும் மஞ்சல் நிறவேளை நூலுக்கு மிகவும் மகத்துவமுண்டு என அறியப்படுகிறது.