நிறுவனம்:அம்/ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
பெயர் | ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | கல்முனை |
முகவரி | கல்முனை வடக்கு பிரதேச செயலகம், அம்பாறை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வளாகத்தினுள் அமைந்துள்ளது. 1989ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆரம்பத்தில் மாநகர சபைக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கி பின்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டது.
இதன்பின்னர் இப்போதுள்ள தனது சொந்த கட்டிடத்தில் 2009ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகின்றது. அக்காலத்தில் வேலை செய்த அலுவலக ஊழியர்கள் சிலர் பிரதேச செயலகத்திற்கு முன்புறம் ஒரு கருங்கல்லின் மீது சிறிய சிலையொன்றை இருப்பதைக் கண்டனர். இது தோற்றத்தில் பிள்ளையார் சிலை போன்று இருந்தமையினால் அனைவரும் அதனை வணங்கத் தொடங்கினர். அதனால் அவ்விடத்தில் சிறிய ஆலயம் அமைக்க ஊழியர்கள் தீர்மானித்தனர்.
அப்போது இருந்த பிரதேச செயலாளர் திரு. லவநாதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக திருப்பணி வேலைகளை ஆரம்பித்தனர். பல்வேறுபட்டவர்களின் நன்கொடையினாலும் உதவியாலும் ஆலயக்கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் கல்முனை மாநகர முதல்வரினால் ஆலய கட்டுமான பணிகள் இடைநிறுத்தும் படியும் சட்டவிரோத கட்டிடம் எனவும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த திடீர் நெருக்கடியினால் வழக்கு நடந்து முடியும் வரை ஆலயம் நிறைவடையாமல் இருந்தது. 2018ம் ஆண்டு பிரதேச செயலாளர் திரு. ஜெயரூபன் அவர்கள் இறந்த பின்னர் புதிய செயலாளராக திரு. அதிசயராஜ் அவர்கள் பதவி ஏற்றார். அதன் பின்னர் வழக்கு தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருந்தது. பின்னர் இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆலயத் திருப்பணிகள் முடிவடைந்து 2020ம் ஆண்டு ஆவணி 31ம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது ஆலயம் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.