ஆளுமை:ஹனிபா, நூர்முஹம்மத் லெப்பை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹனிபா
தந்தை நூர்முஹம்மத் லெப்பை
தாய் ஜெமிலா உம்மா
பிறப்பு 1929
இறப்பு 1993.12.25
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹனிபா, நூர்முஹம்மத் லெப்பை (1929 - 1993.12.25) கண்டி, படகொள்ளாதெனியவைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர், சமூக சேவையாளர். இவரது தந்தை நூர்முஹம்மத் லெப்பை; தாய் ஜெமிலா உம்மா. இவர் கல்ஹின்னை அல்-மனார், அளுத்கம அரபுக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவர் 1947 இல் எழுத்துத் துறையில் பிரவேசித்துச் சிறுகதைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகைளில் வெளிவந்தன. இவர் பகற்கொள்ளை, ஏமாற்றம், மர்மக்கடிதம், இலட்சியப் பெண் முதலான நாவல்களையும் 1992 ஆம் ஆண்டு மாணிக்கச் சுடர்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும் ஆக்கியுள்ளார். இவர் மாமா என்னும் புனைபெயரில் பிரபல்யம் அடைந்ததுடன் கதாசிரியர், கவித்தாரகை என்னும் பட்டங்களைப் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 21-23