ஆளுமை:ஶ்ரீதேவி, நகுலேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீதேவி நகுலேஸ்வரன்
தந்தை கனநாதன்
தாய் நாகபூசணி
பிறப்பு 1960.06.02
ஊர் திரியாய், திருகோணமலை
வகை கலாச்சார துறை ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஸ்ரீதேவி நகுலேஸ்வரன் அவர்கள் திருகோணமலையின் திரியாய் கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி கனநாதன், நாகபூசணி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு ஆண் சகோதரர்களும், ஆறு பெண் சகோதரிகளும் உள்ளனர். இவரது தந்தை ஒரு ஆசிரியர் ஆவார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். உயர்தரத்தில் கலைப் பிரவில் தோற்றி சித்தி அடைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தை பூர்த்தி செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பணியில் இணைந்து கொண்ட இவர் தனது முதல் நியமனத்தை 1988ம் ஆண்டு திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் கற்பித்தார். தமிழ் பாட ஆசிரியராக பாடசாலையிலும், தனியார் கல்வித் துறையிலும் சிறப்புறக் கற்பித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய பின் மீண்டும், திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அப்போதைய கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த திவகளாலா அவர்களால் இவரது திறமை இனங்காணப்பட்டு, பண்பாட்டுத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக இணைத்துக்கொள்ளப்பட்டார். இவர் அந்த காலப்பகுதியில் திருகோணமலையைச் சேர்ந்த பல கலைஞர்களின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன், அவர்களது செயற்பாடுகளை வெளிக்கொணர்வதற்கும் முன் நின்று செயல்பட்டார். குறிப்பாக இவருக்கு நந்தினி சேவியர், வில்வரட்டினம், யோகராஜா, சிவத்தம்பி, மௌனகுரு போன்றோர் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர்.

மேலும் அப்போதைய ஆளுநர்களும், கல்வி அமைச்சின் செயலாளர்களும் இவரது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் விதத்தில் செயல்பட்டனர்.

இவர் சிவத்தம்பி தொடர்பிலான ஆவண திரைப்படத்தையும், One A, ஒற்றைக்கால் என பல குறுந்த திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களின் பிரிப்பு இடம்பெற்ற பின்னர் வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு திணைக்கள பணிப்பாளராக சுமார் 15 வருடங்கள் சேவையாற்றி, தன்னால் இயன்ற பணிகளை வழங்கிய பின்னர் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.