ஆளுமை:வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை.
நூலகம் இல் இருந்து
பெயர் | வேலுப்பிள்ளை |
தந்தை | கந்தப்பிள்ளை |
பிறப்பு | 1860.03.07 |
இறப்பு | 1944 |
ஊர் | வசாவிளான் |
வகை | புலவர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை (1860.03.07 - 1944 ) யாழ்ப்பாணம், வசாவிளானைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவர் கல்லடி வேலுப்பிள்ளை என அறியப்பட்டார். சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையைத் தொடக்கி எட்டு ஆண்டுகள் வரையில் நடத்தி வந்த இவர், காளமேகப் புலவரைப் போல இன்பக்கவிகள் பல பாடியுள்ளார். இவர் யாழ்ப்பாண வைபவக் கௌமுதி, கதிர மலைப் பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரை மக்கள் கல்லடி வேலுப்பிள்ளை எனவும், ஆசுகவி எனவும், கண்டனப் புலி எனவும் குறிப்பிடுவதுண்டு.
வளங்கள்
- நூலக எண்: 3685 பக்கங்கள் 01-67
- நூலக எண்: 963 பக்கங்கள் 208-209